
இந்தியப் பங்குச்சந்தையிலிருந்து 2022ம் ஆண்டில் இதுவரை ரூ.ஒரு லட்சத்துக்கு 14ஆயிரத்து 855 கோடி முதலீட்டை அந்நிய முதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.உலகளவில் அதிகரிக்கும் புவியஅரசியல் பதற்றம், பணவீக்கம் ஆகிய காரணங்களால் முதலீட்டாளர்கள் இந்தியச்ச ந்தையிலிருந்து முதலீட்டை திரும்பப் பெற்றுள்ளனர்
ரூ.1.14 லட்சம் கோடி
அந்நிய முதலீட்டாளர்கள் உள்நாட்டுச் சந்தையில் இந்த மாதத்தில் மட்டும் ரூ.48ஆயிரத்து261 கோடிக்கு பங்குகளை விற்பனை செய்துள்ளனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டில் இதுவரை ரூ.ஒருலட்சத்து 14ஆயிரத்து 855 கோடிக்கு பங்குகளை விற்று முதலீட்டை எடுத்துள்ளனர்.
தொடர்ந்து 6-வது மாதம்
2022,ஜனவரியில் பங்குச்சந்தையிலிருந்து ரூ.28ஆயிரத்து 526 கோடி, பிப்ரவரி மாதத்தில் ரூ.38ஆயிரத்து 68 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.48ஆயிரத்து 261 கோடி முதலீட்டை அந்நியமுதலீட்டாளர்கள் திரும்பப் பெற்றுள்ளனர். தொடர்ந்து 6-வது மாதமாக அந்நிய முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்று வருகிறார்கள்.
கச்சா எண்ணெய் விலை
இதுகுறித்து கோடக் மகிந்திரா பங்குச்சந்தை ஆய்வாளர் ஷிபானி குரியன் கூறுகையில் “ உக்ரைன் ரஷ்யா போர் இந்தியப்பொருளாதாரத்தில் நேரடி பாதிப்பு என்பது மிகக் குறைவுதான். இரு நாடுகளில் இருந்தும் நாம்பெரிதாக இறக்குமதியை நம்பியிருக்கவில்லை என்பதால் நேரடி பாதிப்பு குறைவு.
பணவீக்கம்
ஆனால், ரஷ்யா உக்ரைன் போரால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும்போது, இந்தியாவை கடுமையாகப் பாதிக்கும். ஏனென்றால், கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதத்தை இறக்குமதி மூலமே இந்தியா நிறைவேற்றுகிறது. ஆதலால் கச்சா எண்ணெய் விலை உயரும்போது, அனைத்துவகை பொருட்களின் விலையும் அதிகரிக்கும், பணவீக்கம் உயரும், இந்தியா இறக்குமதிக்கு அதிகமாக செலவிட வேண்டியதிருக்கும். இது பொருளாதாரத்துக்கு அழுத்தத்தை அளிக்கும் என்பதால், முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெற்றனர்.
கச்சா எண்ணெயில் 10 சதவீதம் விலை உயரும்போது, அதன் தாக்கம் பணவீக்கத்தில் 30 புள்ளிகள் வரைஉயரும். நடப்புப்பற்றாக்குறையில் 30 புள்ளிகள்வரை பற்றாக்குறை ஏற்படும். ஆதலால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் அணுகுகிறார்கள்” எனத் தெரிவித்தார்
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.