2,761 பங்குகள் சரிவைக் கண்ட நிலையில், 1,098 பங்குகள் மட்டுமே முன்னேற்றம் கண்டிருக்கின்றன. 141 பங்குகள் மாற்றம் ஏதும் இல்லாமல் தப்பியுள்ளன.
இந்திய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆரம்பத்தில் பெற்ற ஆதாயங்கள் அனைத்தையும் கைவிட்டு கடுமையாக சரிவைச் சந்தித்துள்ளது. ஊடகங்கள், அரசுக்குச் சொந்தமான கடன் வழங்கும் நிறுவனங்கள், எரிசக்தி மற்றும் உலோகப் பங்குகள் வீழ்ச்சி கண்டுள்ளன.
சென்செக்ஸ் 1,050 புள்ளிகளுக்கு மேல் சரிந்து 70,400 ஐ எட்டியது. அதே நேரத்தில் நிஃப்டி 21,250 புள்ளிகளுக்குக் கீழே சரிந்தது. அதாவது, 30-பங்குகள் கொண்ட சென்செக்ஸ் அதிகபட்சமான 72,039.20 லிருந்து 1,669 புள்ளிகள் சரிந்துள்ளது. நிஃப்டி அதிகபட்சமான 21,750.25 இலிருந்து 519 புள்ளிகள் குறைந்துள்ளது. சுமார் ரூ.8 லட்சம் கோடி முதலீட்டாளர்களின் பங்குகள் வீழ்ச்சி அடைந்துள்ளன.
ஹெச்டிஎஃப்சி வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஆக்சிஸ் வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ, எல் அண்ட் டி மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி போன்ற முன்னணி பங்குகள் இன்றைய பெரும் சரிவுக்குக் காரணமாக அமைந்துள்ளன.
இன்று 24 பங்குகள் 52 வாரங்களில் இல்லாத அளவுக்குச் சரிவைச் சந்தித்துள்ளன. எச்டிஎஃப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஓரியண்ட் எலக்ட்ரிக், விஐபி இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஜீ என்டர்டெயின்மென்ட் போன்ற பிஎஸ்இ பங்குகள் ஆண்டின் மிகப்பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளன. அதே நேரத்தில் 456 பங்குகள் இன்று தங்கள் ஓராண்டு உச்சத்தை தொட்டுள்ளன.
4,000 பங்குகளில் 2,761 பங்குகள் சரிவைக் கண்ட நிலையில், 1,098 பங்குகள் மட்டுமே முன்னேற்றம் கண்டிருக்கின்றன. 141 பங்குகள் மாற்றம் ஏதும் இல்லாமல் தப்பியுள்ளன.