
இந்திய பங்குச் சந்தையில் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50-ல் HDFC வங்கி, ICICI வங்கி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் போன்றவற்றின் பங்குகள் உயர்ந்ததன் மூலம் இன்றைய பங்கு வர்த்தகம் ஏறுமுகத்தில் இருந்தது.
இன்று மதியம் வரை நிலையாக வர்த்தகம் செய்த பிறகு, சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வைக் கண்டன. சென்செக்ஸ், நிப்டி இரண்டும் தலா1.5% க்கும் அதிகமாக உயர்ந்தன. புவிசார் அரசியல் ரீதியாக அமைதியான சூழல் ஏற்பட்டு இருப்பது இன்றைய சந்தையில் பிரதிபலித்துள்ளது. கடந்த 2024, அக்டோபர் 17- க்குப் பிறகு முதல் முறையாக நிஃப்டி 25,000 அளவை மீண்டும் பெற்றது.
சென்செக்ஸ் அதன் முந்தைய முடிவான 81,330.56 க்கு எதிராக 81,354.43 இல் தொடங்கி 1,340 புள்ளிகள் அல்லது 1.6 சதவீதம் உயர்ந்து அதிகபட்சமாக 82,670 ஐ எட்டியது. முந்தைய சந்தையில் 24,666.90 புள்ளிகளில் வர்த்தகம் செய்த நிஃப்டி 50 இன்று 25,000 புள்ளிகளை மீண்டும் எட்டியது.
மெட்டல், ஐடி பங்குகள்
பங்குச் சந்தையில் இன்று மெட்டல், ஐடி மற்றும் ஆட்டோ போன்ற முக்கிய துறைகள் சிறப்பாக செயல்பட்டன. அவை 1% முதல் 1.6% வரை லாபத்துடன் வர்த்தகம் செய்தன. பிற்பகல் 2 மணிக்கு அதிக லாபம் ஈட்டியவர்களில் ஹீரோ மோட்டோகார்ப், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எச்சிஎல் டெக், டிரென்ட், டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், எடர்னல், கிராசிம் மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை அடங்கும்.
மிட்கேப் பிரிவில், லிண்டே இந்தியா, ஜீ என்டர்டெயின்மென்ட், யெஸ் பேங்க், ஸ்டார் ஹெல்த் மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் ஆகியவை முன்னணி லாபத்தை ஈட்டின. எதிர்மறையாக, முத்தூட் ஃபைனான்ஸ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ், டோரண்ட் பவர் மற்றும் டிக்சன் டெக்னாலஜிஸ் ஆகியவை மோசமாக செயல்பட்டன.
ஸ்மால்கேப் பிரிவில், திலக்நகர் இண்டஸ்ட்ரீஸ், திரிவேணி டர்பைன் மற்றும் நெல்காஸ்ட் ஆகியவை இன்று சிறந்து செயல்பட்டன. அதே நேரத்தில் ஹிட்டாச்சி எனர்ஜி, சிஇஎஸ்சி மற்றும் மணப்புரம் ஃபைனான்ஸ் ஆகியவை பின்தங்கின. தொழில்நுட்ப ரீதியாக, நிஃப்டி 50 பல நாட்களாக அதன் 200 நாள் சராசரியை (DMA) விட கூடுதலாக வர்த்தகம் செய்து வருகிறது. நிப்டி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளித்து வருகிறது.
பாதுகாப்பு பங்குகளின் விலை வியாழக்கிழமையும் உயர்வு கண்டது. ஏப்ரல் 22 அன்று பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு நிஃப்டி பாதுகாப்பு குறியீட்டின் சந்தை மூலதனம் 1 டிரில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்து 10.4 டிரில்லியன் டாலராக இருந்தது. பிற்பகல் 1:30 மணி நிலவரப்படி குறியீட்டு எண் 3.13 சதவீதம் உயர்ந்து, தொடர்ந்து நான்காவது நாளாக அதன் விலை உயர்வு நீடித்தது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.