
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததில் இருந்து பங்குச்சந்தையில் ஏற்பட்ட ஏற்ற, இறக்கம், ஊசலாட்டத்தன்மை காரணமாக இந்திய முதலீட்டாளர்கள் உக்ரைன் ஜிடிபி மதிப்பை விட அதிகமாக இழந்துள்ளனர்.
மும்பை, தேசியப் பங்குச்சந்தைகள் தொடர்ந்து 8-வது நாளாக இன்று சரிவுடன் முடிந்து, கரடியின் பிடியில் சிக்கித் தவிக்கிறது.
உக்ரைன்-ரஷ்யா போர், சர்வதேச சந்தையி்ல் கச்சா எண்ணெய் விலை பேரல் 118 டாலராக உயர்ந்தது, கச்சா எண்ணெய் விலை உயர்வால் ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கப்படும் என்ற அச்சம் போன்ற காரணங்களால் மும்பை, தேசியப் பங்குச்சந்தையில் வர்த்தகத் தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது.
அதுமட்டுமல்லாம் ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுஉலை அருகே ரஷ்ய ராணுவம் குண்டுவீசி தாக்குதல் நடத்தியது உலகளவில் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. ஆசியப் பங்குச்சந்தைகள் இந்த சம்பவத்தால் சரிவிலிருந்து மீளவில்லை.
வர்த்தகம் இன்று காலை தொடங்கியவுடன் 700 புள்ளிகள் சரிந்து மேலும் 50 புள்ளிகளை இழந்து, தேசியப் பங்குச்சந்தையான நிப்டியில் 208 புள்ளிகள் சரிந்துது. இதனால் காலை வர்த்தக நேரத்திலேயே இந்திய முதலீட்டாளர்கள் ரூ.5 லட்சம் கோடியை இழந்தனர்.
மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் முடிவில் சென்செக்ஸ் 768 புள்ளிகள் சரிந்து, 54,333 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசியப் பங்குச்சந்தையில் நிப்டி 252 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்து, 16,245 புள்ளிகளில் முடிந்தது
வர்த்தகம் நேற்று முடிந்தபோது, முதலீட்டாளர்களின் பங்கு மதிப்பு ரூ.251 லட்சம் கோடி இருந்தது. இது இன்று வர்த்தகம் முடிவில் ரூ.5 லட்சம் கோடியை இழந்து ரூ.246 லட்சம் கோடியாகச்ச ரிந்தது.
இந்திய முதலீட்டாளர்கள் கடந்த பிப்ரவரி 15ம் தேதியிலிருந்து, பங்குச்சந்தையில் ரூ.15 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இந்திய முதலீட்டாளர்கள் இழந்த தொகை என்பது, உக்ரைன் நாட்டின் ஜிடிபியின் மதிப்பைவிட அதிகமாகும்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.