
பொதுத்துறை வங்கியான எஸ் பி ஐ வங்கியானது , தங்களது ஊழியர்களின் நலன் கருதி அவசர காலகட்டத்தில், வீட்டிலிருந்தே வேலை செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது . இதற்கான ஒப்புதலை எஸ் பி ஐ நிர்வாகிகள் வாரியம் ஒப்புதல் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்கானப் செயலி ..
புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தி செயலிகளை உருவாக்கும் பணியில் எஸ்.பி.ஐ வங்கி தற்போது முழு முயற்சியுடன் ஈடுபட்டு வருகிறது. இவ்வாறு வீட்டிலிருந்தே பணி செய்வதை துரிதப்படுத்தும் விதமாகவும், அதே வேளையில் பணிகளை கண்காணிக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்த தீவிரமாக இறங்கியுள்ளது எஸ்பிஐ
எந்தெந்த வேலைகளுக்கு இது பொருந்தும்....
மார்க்கெட்டிங், கஷ்டமர் ரிலேஷன்சிப் மேனேஜ்மெண்ட், சோஷியல் மீடியா மேனேஜ்மெண்ட், செட்டில்மெண்ட் அண்ட் ரிகன்ஷிலேஷன்ஸ், கம்ப்லைண்ட் மேனேஜ்மெண்ட் அப்ளிகேஷன்ஸ் போன்ற பணிகள் மட்டும் வீட்டிலிருந்தே செய்வதற்கு வழிவகை செய்ய உள்ளது எஸ்பிஐ
காரணம் என்ன ?
சமீபத்தில் எஸ்பிஐ வங்கியுடன் சில கிளை வங்கிகள் இணைந்துள்ளதால், ஊழியர்கள் அமர்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த புதிய திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது .
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.