
இன்று ஒரே நாளில் சவரனுக்கு 104 ரூபாய் அதிகரிப்பு !!!
தங்கத்தின் விலையில், ஒவ்வொரு நாளும் தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது.
கடந்த சில தினங்களாக , சற்று குறைவான விலையில் தங்கம் விற்பனை யானது. தற்போது சில நாட்களாக தொடர்ந்து , தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் , கிராம் ஒன்றுக்கு 13 ரூபாய் அதிகரித்து ,2 ஆயிரத்து 910 ரூபாயாகவும், சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 23, 280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் 10 கிராம் சுத்த தங்கம் 31 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 47 ரூபாய் 10 காசுக்கும் ,
ஒரு கிலோ பார் வெள்ளி 44 ஆயிரத்து 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.