காலாண்டு வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தரவு பிப்ரவரி 29 அன்று வெளியிடப்படும். செப்டம்பர் 2023 இல் முடிவடைந்த மூன்று மாதங்களில், பொருளாதாரம் 7.6 சதவீத வளர்ச்சியை எட்டியது.
டிசம்பர் காலாண்டில் நாட்டின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி.) வளர்ச்சி எதிர்பார்த்ததை விட 7 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று ஒரு ஜெர்மனிய வங்கி ஒன்று கணித்துள்ளது.
"உண்மையான ஜிடிபி அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் ஆண்டுக்கு ஆண்டு 7.0 சதவிகிதம் வளர்ச்சியடையும் என்று நாங்கள் கணித்துள்ளோம். இது நாங்கள் முன்பு எதிர்பார்த்ததை விட அதிகமாகும்" என்று ஜெர்மனியைச் சேர்ந்த Deutsche Bank வெளியிட்டுள்ள புதிய கணப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலாண்டு வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தரவு பிப்ரவரி 29 அன்று வெளியிடப்படும். செப்டம்பர் 2023 இல் முடிவடைந்த மூன்று மாதங்களில், பொருளாதாரம் 7.6 சதவீத வளர்ச்சியை எட்டியது.
மாத்தி மாத்தி 20 போன்களை பயன்படுத்தும் சுந்தர் பிச்சை! கூகுள் சி.இ.ஓ. சொல்லும் காரணம் என்ன தெரியுமா?
தொழில்துறை உற்பத்தி, ஏற்றுமதி, எண்ணெய் அல்லது தங்கம் அல்லாத இறக்குமதிகள், வங்கிக் கடன் மற்றும் நுகர்வோர் பொருட்கள் உள்ளிட்ட ஐந்து முக்கியக் குறியீடுகளின் அடிப்படையில் ஜெர்மன் நிறுவனம் கணித்துள்ளது.
ஏறக்குறைய 65 குறியீடுகளைக் கொண்ட மற்றொரு மதிப்பீட்டின்படி டிசம்பர் காலாண்டில் ஜிடிபி 7 சதவீத வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்று கூறியுள்ளது.
"கடந்த ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் அதற்கு முந்தைய கோவிட் பெருந்தொற்று பாதிப்புகள் இருந்தபோதிலும் இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி வேகம் எதிர்பார்த்ததை விட மிகச் சிறப்பாக உள்ளது" என்று கூறியிருக்கிறது..
கார்ப்பரேட் துறை தரவுகளின்படி, மொத்த லாப வேகம் மிதமாக உள்ளது. இது தொழில்துறையின் உண்மையான மொத்த மதிப்பு அக்டோபர்-டிசம்பர் காலத்தில் 7-8 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
39 நாணயங்கள், 37 காந்தங்களை விழுங்கிய நபர்! பாடி பில்டிங் ஆசையால் நடந்த விபரீதம்!