RBI REPO RATE: RBI: ரெப்போ ரேட் உயர்வு: கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ எவ்வளவு உயரும்? யாருக்கு நன்மையா?

Published : May 05, 2022, 02:57 PM IST
 RBI REPO RATE: RBI: ரெப்போ ரேட் உயர்வு: கடன் வாங்கியவர்களின் இஎம்ஐ எவ்வளவு உயரும்? யாருக்கு  நன்மையா?

சுருக்கம்

RBI REPO RATE : RBI : ரிசர்வ் வங்கி திடீரென கடனுக்கான ரெப்போ ரேட்டை 40 புள்ளிகள் உயர்த்தியதால், வட்டிவீதம் 4.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டிவீதம் அதிகரிப்பு மாதந்தோறும் இஎம்ஐ செலுத்துவோர், டெபாசிட் செய்தவர்களுக்கு எந்த அளவு பாதிக்கும் என்பதை செய்தி அலசுகிறது

ரிசர்வ் வங்கி திடீரென கடனுக்கான ரெப்போ ரேட்டை 40 புள்ளிகள் உயர்த்தியதால், வட்டிவீதம் 4.40 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த வட்டிவீதம் அதிகரிப்பு மாதந்தோறும் இஎம்ஐ செலுத்துவோர், டெபாசிட் செய்தவர்களுக்கு எந்த அளவு பாதிக்கும் என்பதை செய்தி அலசுகிறது

பணவீக்கம் அதிகரிப்பு

2020ம் ஆண்டு மார்ச் மாதம் கடனுக்கானவட்டி வீதம் 40 புள்ளிகளைக் குறைத்து ரிசர்வ் வங்கி அறிவித்தது. கொரோனாவில் மக்களின் வாழ்வாதாரம் மோசமடைந்ததால், வட்டிவீதத்தைரிசர்வ் வங்கி குறைத்தது. ஆனால், கடந்த 3 மாதங்களாக பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் உச்சட்டக் கட்ட அளவைவிடக்க டந்துவிட்டதால் வேறு வழியின்றி வட்டிவீதத்தை நேற்று ரிசர்வ் வங்கி உயர்த்தியது.

வட்டி உயர்வு

இதன்படி 4 சதவீதமாக இருந்த கடனுக்கான வட்டி 4.40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், வங்கிகளுக்கான ரொக்கக் கையிருப்பு விகிதமும் 50 புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆர்இஎஸ் சந்தை நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநர் சமந்தக் தாஸ் கூறுகையில் “ ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட் உயர்வு ரியல் எஸ்டேட் பார்வையில் வரவேற்கத்தக்கது அல்ல. இது வீட்டுக் கடன் பெற்றவர்களுக்குகூடுதலான வட்டிச் சுமையை ஏற்படுத்தும் 
2019ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி முதல் அனைத்து வங்கிகளும், தங்களின் சில்லரைக் கடன்களுக்கான வட்டி வீதத்தை, ரிசர்வ் வங்கியின் ரெப்போ ரேட்டுடன் இணைக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ஆர்பிஐ பெஞ்ச்மார்க்

இதனால் பெரும்பாலான வங்கிகள் ரெப்போ ரேட்டை தங்களின் பெஞ்ச்மார்க்காக வைத்துள்ளன. இதை அடிப்படையாக வைத்து, வங்கிகள் தங்களின் கடன் இடர்பாடுகளுக்கு ஏற்ப வட்டிவீதத்தை கடன் வாங்குவோருக்கு கடன் செலுத்தும் காலத்துக்கு ஏற்ப மாற்றி அமைக்கும். 

ரெப்போர ரெட் உயர்வு என்பது, அனைத்துவிதமான வீட்டுக்கடன், வாகனக் கடன் மற்றும் பாதுகாக்கப்பட்ட மற்றும் பாதுகாப்பில்லாத கடன்கள் அனைத்துக்கும் பொருந்தும். ரெப்போரேட்டுடன் இணைக்கப்பட்ட கடன்வீதம்(ஆர்எல்எல்ஆர்) கீழ் வரும் கடன்கள் குறிப்பாக வீட்டுக்கடன், சொத்தை அடமானம் வைத்து கடன் பெறுதல் ஆகியவை இனிமேல் காஸ்ட்லியாகும். அவர்களுக்கான இஎம்ஐ கட்டணமும் அதிகரிக்கும். ஆனால் வாகனக் கடன்களுக்கான வட்டிவீதம் நிலையானது, இதனால்பெரிதாக உயர்வதற்கு வாய்ப்பில்லை.ஆனால், அடுத்த காலாண்டில் வரும்போது இதன் உயர்வு பாதிக்கும்.

வட்டிவீதம் 40 புள்ளிகள் உயர்த்தப்பட்டிருப்பதால், வங்கியில் புதிதாக கடன் பெறுவோர் அல்லது ஏற்கெனவே கடன் பெற்றிருப்போருக்கு சுமையைஏற்படுத்தும். ஏற்கெனவே கடன் பெற்றிருந்தவர்கள் கடனுக்கான இஎம்ஐ அதிகமாகச்செலுத்த வேண்டும்.

உதாரணமாக ஒருவர் வீட்டுக்கடன் ரூ.40 லட்சம் பெற்றுள்ளார். 20 ஆண்டுகளில் செலுத்த முடிவு செய்துள்ள அவருக்கு மாதம் 7 சதவீதம் வட்டி விதிக்கப்படும். ஆனால், தற்போது 40 புள்ளிகள் வட்டி உயர்த்தப்பட்டிருப்பதால், இனிமேல் அந்த நபர் 7.40 சதவீதம் வட்டி செலுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார்

ரெப்போ ரேட் உயர்வினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து வங்கியில் கடன் பெற்றறவர்கள் எவ்வாறு தற்காத்துக் கொள்ள முடியும்?

நீண்டகாலக் கடன் பெற்றவர்களை இந்த ரெப்போரேட் நிச்சயம் பாதிக்கும். ஆதலால் கடனை விரைவாகவும், மொத்தமாகவும் செலுத்துவதற்கான மாற்றுவழியைத் தேட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் 5 சதவீதத்தை மிச்சம் செய்தால், அதிகமாகச் சேமிக்க முடியும். 

டெபாசிட்தாரர்களுக்கு ரெப்போ ரேட் உயர்வால் என்ன நன்மை

டெபாசிட்தாரர்களுக்கு ரெப்போ ரேட் உயர்வு என்பது நல்ல செய்தி. அவர்களின் டெபாசிட்களுக்கு நல்ல வட்டி கிடைக்கும்.ரெப்போ ரேட் உயர்ந்தாலும், உடனடியாக அவர்களுக்கு பலன் கிடைக்காது, வட்டிஉயர்வின் பலன் கிடைக்க சிறி்து காலமாகும். ஆனால் டெபாசிட் தாரர்களுக்கு நன்மை உண்டு” எனத் தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்