போஸ்ட் ஆபிஸில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு.. இனி இதையெல்லாம் செய்ய முடியாது !!

By Raghupati R  |  First Published Aug 28, 2023, 10:36 AM IST

தபால் அலுவலக சேமிப்புக் கணக்கின் 3 விதிகள் மாற்றப்பட்டுள்ளது. அது என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.


தபால் அலுவலக சேமிப்பு கணக்கு (திருத்தம்) திட்டம் 2023ன் கீழ், தபால் அலுவலக சேமிப்பு கணக்கு தொடர்பான 3 முக்கிய விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. ஒவ்வொரு கணக்கு வைத்திருப்பவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தபால் அலுவலக சேமிப்பு கணக்கு தொடர்பான மூன்று முக்கிய மாற்றங்களை மத்திய அரசு செய்துள்ளது. 

புதிய மாற்றங்களில், கூட்டு கணக்கு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், திரும்பப் பெறுதல் மற்றும் வட்டி செலுத்துதல் தொடர்பான விதிகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. கணக்கு வைத்திருப்பவர்களின் வசதிக்காக புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த விதிகளை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

Latest Videos

undefined

கூட்டு கணக்கு

மத்திய அரசு அஞ்சலகத்தின் கூட்டுக் கணக்கு வைத்திருப்போரின் எண்ணிக்கையை உயர்த்தியுள்ளது. விதிகளின்படி, இதுவரை அதிகபட்சமாக இருவர் கூட்டுக் கணக்கு வைத்திருப்பவர்கள், தற்போது மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, இப்போது 3 பேர் இணைந்து அஞ்சலகத்தில் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம்.

சேமிப்புக் கணக்கு

அஞ்சலக சேமிப்புக் கணக்கு திரும்பப் பெறுவதற்கான படிவத்தை மாற்றும் படிவம் 2ல் இருந்து படிவம் 3க்கு மத்திய அரசு மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தால் பாஸ்புக்கைக் காட்டி கணக்கில் இருந்து குறைந்தது ஐம்பது ரூபாய் எடுக்கலாம். அஞ்சலக சேமிப்புக் கணக்குத் திட்டம் 2019 இன் படி, கணக்கிலிருந்து குறைந்தது ஐம்பது ரூபாயை எடுக்க, படிவம்-2 உடன் முறையாக நிரப்பப்பட்ட மற்றும் கையொப்பமிடப்பட்ட பாஸ்புக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்பது முதல் விதி.

வட்டி செலுத்தும் விதிகள்

அஞ்சல் அலுவலக சேமிப்பு கணக்கு வட்டி விகிதத்தை செலுத்தும் விதி தொடர்பான புதிய விதிகளின்படி, பத்தாவது நாள் மற்றும் மாத இறுதிக்குள் ஒரு கணக்கில் குறைந்த தொகைக்கு ஆண்டுக்கு 4% வட்டி அனுமதிக்கப்படும். கணக்கீடு செய்த பிறகு, ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும் அது கணக்கில் வரவு வைக்கப்படும். அதே சமயம், கணக்கு வைத்திருப்பவர் இறந்துவிட்டால், அந்தக் கணக்கு முடிந்த மாத இறுதியில் மட்டுமே அவரது கணக்கில் வட்டி செலுத்தப்படும்.

இந்த தொகையை விட அதிகமாக பணம் வைத்திருந்தால் அவ்ளோதான்.. ஐடி ரெய்டு உறுதி - எவ்ளோ தெரியுமா.?

click me!