ஷாக்கிங் நியூஸ்: விரைவில் பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்வு..!

Published : Jul 05, 2019, 03:28 PM IST
ஷாக்கிங் நியூஸ்: விரைவில் பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்வு..!

சுருக்கம்

மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் மதியம் வரை பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளது. 

விரைவில் பெட்ரோல் விலை ரூ.2.50 உயர்வு..!  

மத்திய நிதி அமைச்சர் நாடாளுமன்றத்தில் இன்று காலை முதல் மதியம் வரை பொது பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் பல முக்கிய அம்சங்கள் இடம் பெற்று உள்ளது.

 

குறிப்பாக பெட்ரோல், டீசல் மீது ஒரு லிட்டருக்கு 2 ரூபாய் கூடுதல் வரி விதிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட அறிவிப்பு வாசிக்கப்பட்டது. இதன் காரணமாக பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு தலா 2 உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, பெட்ரோல் டீசல் லிட்டருக்கு  ரூ.1 கூடுதல் வரி மற்றும் கூடுதல் சுங்கவரி உட் கட்டமைப்புக்காக ரூ.1 விதிக்கப்பட்டுள்ளது. ஆக ரூ. 2 மத்திய வரியுடன் மாநில வாட் வரி சேரும்போது லிட்டருக்கு ரூ. 2.50 ரூபாய் விலை ஏற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது 

மேலும் மத்திய பட்ஜெட் வெளியான புதிய வரிவிதிப்பு எதிரொலியால் இன்று பங்குசந்தை வீழ்ச்சி கண்டது. தங்கம் விலையும் சவரனுக்கு ரூ.560 உயரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தவிர பட்ஜெட்டில் பல  முக்கிய திட்டங்கள் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

UPI-யோடு கிரெடிட் கார்டா..! மெர்சல் காட்டிய கூகுள் பே..! இந்தியர்கள் செம குஷி!!
டிசம்பர் 31 கடைசி தேதி.. இந்த பணிகளை மறக்காதீங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்!