
நவீன காலத்துக்கு ஏற்ப Artificial intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிகளின் தேவை வருகின்றன. இதன் காரணமாக பெரும் நிறுவனங்கள் ஏஐயில் பெரும் முதலீடுகளை செய்து வருகின்றன. இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் ஆரக்கிள் நிறுவனம் அடைந்திருக்கும் மாபெரும் வெற்றி, அதன் பங்குச் சந்தை மதிப்பை உச்சத்திற்கு உயர்த்தியுள்ளது.
ஒரே இரவில் கோடீஸ்வரர்களான ஆரக்கிள் ஊழியர்கள்
இதன் காரணமாக, பெங்களூருவில் உள்ள ஆரக்கிள் ஊழியர்கள் பலர் ஒரே இரவில் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். அதாவது செப்டம்பர் 10 அன்று ஆரக்கிள் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள AI கிளவுட் ஒப்பந்தங்களை அறிவித்தது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 36% உயர்ந்து, 1992-க்குப் பிறகு இதுவரை இல்லாத புதிய உச்சத்தை எட்டியது. இதன் காரணமாக ஆரக்கிளின் சந்தை மதிப்பு 933 பில்லியன் டாலராக உயர்ந்தது.
ஆரக்கிள் இணை நிறுவனர் உலக பணக்காரரானார்
ஆரக்கிள் பங்குகள் இமாலய உச்சம் தொட்டதால் அந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். மேலும் அந்த நிறுவனத்தில் சேர்ந்த புதிய ஊழியர்களையும், பணிநீக்கம் செய்யப்படவர்களையும் செல்வந்தர்களாக்கியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த 25 வயது ஆரக்கிள் பொறியாளர் ஒருவர் பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செல்வத்தை பெற்றுள்ளார்.
ஆரக்கிள் ஊழியர்கள் மகிழ்ச்சி
இதேபோல் 2024ல் பணியில் சேர்ந்த 22 வயது புதிய ஊழியர் ஒருவர், ரூ.60 லட்சம் மதிப்புள்ள RSU-களுடன் தொடங்கி, இப்போது அவரது பங்குகள் ரூ. 1.25 கோடியாக உயர்ந்துள்ளன. 2027ம் ஆண்டுக்குள் இது ரூ.2 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான ஆரக்கிள் ஊழியர் ஒருவர், ''பிப்ரவரியில் நான் பணிநீக்கம் செய்யப்பட்டேன். மீண்டும் பணியில் சேர்ந்தேன். ஆனால் நானே எதிபாராத வகையில் இப்போது கோடீஸ்வரனாகி விட்டேன்;; என்று தெரிவித்துள்ளார்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.