"வீட்டு மனைகளை விற்க அரபி மாந்திரிகம் மூலம் பரிகாரமாம்"...! வடிவேலு காமெடியை மிஞ்சிய "போஸ்டர்"..!

 
Published : Oct 16, 2017, 11:52 AM ISTUpdated : Sep 19, 2018, 01:18 AM IST
"வீட்டு மனைகளை விற்க அரபி மாந்திரிகம் மூலம் பரிகாரமாம்"...! வடிவேலு காமெடியை மிஞ்சிய "போஸ்டர்"..!

சுருக்கம்

new type of poster creates lots of fun in thetn especiallyin real estate dept

தமிழகத்தில் என்றும் பரபரப்பு தான் காணப்படும் என்ற  நிலை தான்  மக்கள்  மனதில் இடம் பிடித்துள்ளது. அது அரசியல் ஆகட்டும்,  டெங்குவாகட்டும்....இரண்டிற்குமே பெரும் பிரபலம் தமிழகம்

ஒரு பக்கம் சோகம்,ஒரு பக்கம் பரபரப்பான அரசியல் என சென்று கொண்டிருக்கும் தமிழகத்தில் எப்பொழுது தான் விடிவு காலம்  கிடைக்குமோ என பலரும் ஏக்கமாக உள்ளனர்.

உதாரணம் ஆக்ஷன் படம்

ஒரு ஆக்ஷன் படத்தில் முழுவதுமே ஆக்ஷனாக இருக்காது.அது போல  நடுவுல கொஞ்சம் பக்கத காணோம் என்ற மாதிரி, நடுவுல கொஞ்சம் ஆக்ஷன் குறைந்து, காமெடி போடுவாங்க...

அதுபோல தான், சீரியஸா போய்கிட்டு இருக்குற தமிழகத்தில் ஒரு பக்கம்  காமெடி மன்னர்கள் தலை தூக்க ஆரம்பித்து உள்ளனர்

அதனுடைய  முதல் கட்டம் தான் வித விதமாக போஸ்ட் அடிச்சு.... சுவர்  முழுக்க ஒட்டுவது.....முன்பெல்லாம் எந்த போஸ்டராக இருந்தாலும்,அதில்  கலர் கலரா ஹைலைட் பண்ணுவாங்க...கிலிட்டரிங் செய்து மினு மினுக்க வைப்பாங்க....ஆனால் வாக்கியமோ கொஞ்சம் மொக்கையாக தான்  இருக்கும்....

போஸ்டர்  ஒட்டுவதற்கும்,பேனர் அடிப்பதற்குமே அதிக செலவு ஆகும்  ஆனால் இப்ப அப்படி கிடையாது....வார்தையாலே சுண்டி இழுக்க வேண்டும்“என முடிவு செய்து விட்டனர் போல.....

அதுல ஒரு வகை தான் ரியல் எஸ்டேட் போஸ்டர்

முன்பெல்லாம் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை பெருக்க சினி  நடிகைகளை வைத்து ,வாய் கிழிய பொய் சொல்ல செய்து, டிவி ரேடியோ என விளம்பரம் செய்தனர்.அதாவது கூவி கூவிஅழைத்து வீட்டு மனைகளை விற்பனை செய்தனர்.

இந்நிலையில்,ஒரு வித்தியாசமான போஸ்டரால் ரியல் எஸ்டேட்  துறை  சூடு பிடிக்கும் போல தோன்றுகிறது.

நமக்கு  சொந்தமான வீடோ அல்லது வீட்டு மனைகளோ விற்கவில்லை  என்றால் அரபி மாந்திரீகம் மூலமாக பரிகாரம் செய்து விற்க  செய்வதாக  போஸ்டர் மூலம்  மக்களை சுண்டி இழுக்கின்றனர்.மக்கள் நம்பாமலா இருக்க போவார்கள்...நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இது போன்ற  காமெடி  போஸ்டர்களால்,பரபரப்பான தமிழகத்தில் வடிவேலு காமெடியை கூட மிஞ்சி விடும் போல இருக்கு இந்த போஸ்டர்.....

பரிகாரமா ...மாந்திரிகமா.... இன்னும் என்னென்ன காமெடி நடக்க போகிறதோ......

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

காத்திருப்பு பயணிகளுக்கு குட் நியூஸ்.. ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
New Year Offer: ஜியோ வழி தனி வழி.! அதிரடி ஆஃபர் வழங்கிய அம்பானி.! ரூ.35,000 மதிப்புள்ள பரிசு காத்திருக்கு.!