புதிய 2,000 ரூபாய் நோட்டும் செல்லாது......!! மார்ச் 31 ஆம் தேதி கெடு - மீண்டும் தலைவலி ஆரம்பம் ....!!!

First Published Jan 25, 2017, 6:58 PM IST
Highlights


புதிய 2,000 ரூபாய் நோட்டும் செல்லாது......!! மார்ச் 31 ஆம் தேதி கெடு - வங்கி அதிகாரி ஓபன் டாக்...!!

 கருப்பு பணத்தை ஒழிக்கும் பொருட்டு,  பழைய  ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அவர்கள் அறிவித்து இருந்தார். இதனை தொடர்ந்து  கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள்,  மக்கள் தங்கள் கையில் இருந்த  பணத்தை எல்லாம் வங்கி கணக்கில்  செலுத்தினர்.

அதே வேளையில்,  திரும்ப பெறப்பட்ட   பழைய  பணத்தை விட,  புது இரண்டாயிரம் ரூபாய்  தாள்களின்   மதிப்பு  குறைவுதான். அதாவது,  டிஜிட்டல் இந்தியாவை நோக்கி  பயணிக்க  வேண்டும் என்பதற்காக , டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும்  வகையில்,  மத்திய  அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. இருப்பினும்  மக்கள்   இதுவரை  ரொக்க பரிவர்த்தனையை தான்  அதிகம்  விரும்புகிப்ன்றனர்.

இந்நிலையில், மார்ச் 31-ந்தேதிக்குள்  புதிதாக வெளியிடப்பட்ட  ரூ.2000 நோட்டுகளும் செல்லாது என அறிவிக்க வாய்ப்புள்ளதாக வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ  தெரிவித்துள்ளது  தற்போது  மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பண மதிப்பு இழப்பு  யாருக்கு பயன்....?  

கார்ப்பரேட் நிறுவனங்கள், தனியார் வங்கிகள் மட்டுமே மத்திய அரசின் நடவடிக்கையால்  பயனடைகிறது என்பது குறிபிடத்தக்கது.

பாதிப்பு  யாருக்கு ?

தொடர்ந்து பேசிய அவர், 25 சதவீதம்  சிறு தொழில் முனைவோர்  வேலைவாய்ப்பை  இழந்துள்ளனர் என்றும், கிரடிட் கார்டுகள் மூலம்  செய்யப்படும் ஒவ்வொரு பண பரிவர்த்தனைக்கும் 48 பைசாவை  அமெரிக்காவை சேர்ந்த விசா போன்ற  3 நிறுவனங்களுக்கு வங்கிகள் செலுத்த வேண்டும் என்பது  அனைவரும் அறிந்ததே. இந்நிலையில்  எத்தனை நாட்களுக்கு  தான் , சர்வீஸ்  சார்ஜ்  இல்லாமல்  பயன்படுத்த முடியும் என்பது  கேள்விகுறி. எனவே  அடுத்த  5 மாதத்தில்,  கார்டு  பயன்படுத்தும்  அனைத்திற்கும்  சர்வீஸ் சார்ஜ்   கொடுக்க  வேண்டும் என்பது  உறுதி  என  தெரிவித்தார்.

முக்கிய அறிவிப்பு :

பணமதிப்பிழப்பு பற்றி  விரிவாக தொடர்ந்து பேசிய  வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் தாமஸ் பிராங்கோ, வரும்  மார்ச் 31-ந்தேதிக்குள்  புதிய 2 ஆயிரம் ரூபாய்  நோட்டுக்கள்  செல்லாது என  அறிவிப்பு  வெளியாக அதிக  வாய்ப்புள்ளதாக  தெரிவித்து  தன் உரையை  முடித்துகொண்டார். இந்த  செய்தி  மக்களிடையே  ஒரு  விதமான  குழப்பத்தையும்,  பதற்றத்தையும்  ஏற்படுத்தியுள்ளது என்பது குறிபிடத்தக்கது.

 

click me!