புகாட்டி maintenance-க்கு இத்தனை கோடிகளா? சர்வீஸ் காஸ்ட் லிஸ்ட் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!

Nandhini Subramanian   | Asianet News
Published : Feb 14, 2022, 11:33 AM ISTUpdated : Feb 14, 2022, 11:34 AM IST
புகாட்டி maintenance-க்கு இத்தனை கோடிகளா? சர்வீஸ் காஸ்ட் லிஸ்ட் பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க!

சுருக்கம்

புகாட்டி நிறுவனத்தின்  குறைந்த விலை சிரான் பர் ஸ்போர்ட் பராமரிப்பு கட்டண விவரங்கள் இணையத்தில் வெளியாகி ஷாக் கொடுக்கிறது.

புகாட்டி நிறுவனத்தின் குறைந்த விலை ஆடம்பர சூப்பர்கார் மாடல் விலை இந்திய மதிப்பில் ரூ. 18.86 கோடி. இந்த பிராண்டின் வாகனங்கள் பராமரிப்பு கட்டணம் அதிகமாக இருக்கும் என எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எனினும், புகாட்டை காரை பராமரிக்க ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கும் 5 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3.7 கோடி வரை செலவாகும்.  

சிரான் மற்றும் வெவ்ரான் மாடல்களுக்கென புகாட்டி நிறுவனம் பிரத்யேக குளோபல் சர்வீஸ் திட்டத்தை வழங்கி வருகிறது. இந்த சர்வீஸ் குழுவில் நன்கு பயிற்சி பெற்ற பத்து புகாட்டி வல்லுனர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் உலகம் முழுக்க சிரான் மற்றும் வெவ்ரான் மாடலை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் 24x7 முறையில் பேச எப்போதும் தயார் நிலையில் இருப்பர். 

சிங்கப்பூரில் வசிக்கும் மலலேசிய புகாட்டி ப்ரியர் ஒருவர் சமீபத்தில் சிங்கப்பூரில் உள்ள புகாட்டி ஷோரூம் சென்று தனது சிரான் பர் ஸ்போர்ட் மாடலுக்கான பராமரிப்பு பற்றிய முழு விவரங்களை கேட்டறிந்து கொண்டார். பின் 30 லட்சம் டாலர்கள் மதிப்புள்ள தனது லிமிடெட் எடிஷன் ஹைப்பர் காரை பராமரிக்க நான்கு ஆண்டுகளுக்கு எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டு பார்த்து இருக்கிறார். 

அதன்படி தனது மாடலை 14 மாதங்கள் / 16 ஆயிரம் கிலோமீட்டர்களில் முதல் சரீவ்ஸ் செய்ய வேண்டும். சரீவ்சில் என்ஜின் ஆயில் மாற்றுவது, ஆயில் ஃபில்ட்டர், கூலண்ட், 16 டிரெயினேஜ் பிளக் உள்ளிட்டவைகளை சரிபார்த்து மாற்ற 24,979 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 18,87,363 செலவாகும். இந்த கட்டணம் வரிகள் சேர்க்காமல் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

இதுதவிர கார்பன் செராமிக் ரோட்டார் டிஸ்க், 3D பிரின்ட் செய்யப்பட்ட கேலிப்பர்கள், டைட்டானியம் பிரேக் பேட் பிளேட் உள்ளிட்டவைகளை மாற்ற 58,952 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 44,54,295 ஆகும். இத்துடன் பிரேக் ஃபுளூயிட், கேபிள்கள் மற்றும் பிரேக் உபகரணங்களை சுத்தம் செய்ய 58,951 டாலர்கள் ரூ. 44,54,295 வரை செலுத்த வேண்டும். 

மேலும் 14 முதல் 16 மாதங்கள் அல்லது 16 ஆயிரம் கிலோமீட்டர்களில் குறைந்த எடை கொண்ட ரிம்களை மாற்ற வேண்டும். இதற்கு 49,958 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 37,74,726 வரை கொடுக்க வேண்டும். இத்துடன் 16 முதல் 18 மாதங்களுக்கு ஒருமுறை பைரெலி விண்டர் சோட்டோசீரோ 3, மிஷெலின் பைலட் ஸ்போர்ட் பேக்ஸ் அல்லது மிஷெலின் பைலட் ஸ்போர்ட் கப் 2 XL மாற்றப்பட  வேண்டும். இதற்கு 7,993 டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 6,03,931  வரை செலவாகும். 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

Rupee Value: இந்திய ரூபாய் மதிப்பு சரிய காரணம் இதுதான்.! இதனால் இவ்ளோ பாதிப்பா?!
Business: மாதத்திற்கு ரூ.1 லட்சம் சம்பாதிப்பது இவ்ளோ ஈசியா?! தித்திக்கும் வருமானம் தரும் தேனீ வளர்ப்பு.!