luxury cars: இவுங்களுக்கு பிரச்சினையே இல்லீங்க! சக்கைபோடுபோட்ட சூப்பர் சொகுசு கார்கள் விற்பனை

By Pothy RajFirst Published Jun 16, 2022, 12:13 PM IST
Highlights

luxury cars in india : பணவீக்கம், பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை இவுங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. ரூ.2 கோடிக்கும் அதிகமான சூப்பர் சொகுசு கார்கள் விற்பனை இந்த நிதியாண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

பணவீக்கம், பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை இவுங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. ரூ.2 கோடிக்கும் அதிகமான சூப்பர் சொகுசு கார்கள் விற்பனை இந்த நிதியாண்டில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

2018ம் ஆண்டு இந்தியாவின் பெரும்கோடீஸ்வரர்கள் ரூ.2 கோடிக்கும் விலை அதிகமான சூப்பர் சொகுசு கார்களை வாங்கினார்கள். 2020ம் ஆண்டில் கொரோனா காரணமாக அந்த வகைக் கார்கள் விற்பனை பாதியாகக் குறைந்தது. ஆனால் மீண்டும் அந்தக்கார்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது.

இத்தாலியைச் சேர்ந்த லம்போர்கினி காருக்கு விற்பனை எதிர்பார்த்ததைவிட அதிகமான முன்பதிவு வந்துள்ளது. இந்தியாவில் விலைவாசி உயர்வு, பணவீக்கம், பொருளாதார வளர்ச்சிக்குறைவு போன்றவை நடுத்தரமக்களுக்கும், சாமானியர்களுக்கு மட்டும்தான், ஆனால், பெரும்கோடீஸ்வரர்களுக்குஇது இல்லை என்பதுபோல் விற்பனை அதிகரித்துள்ளது.

லம்போர்ஹினி நிறுவனத்தின் இந்தியத் தலைவர் சரத் அகர்வால் கூறுகையில் “ 2022ம் ஆண்டுக்குள் நுழைந்துவிட்டோம், நல்ல ஆர்டர்கள் கிடைத்து வருகின்றன. முதல் 5 மாதங்களில் சாதகமான வளர்ச்சி காணப்படுகிறது. கார்களின் எண்ணிக்கை சந்தையை பிரதிபலிக்காது.

உலகிலேயே அதிகமான கோடீஸ்வரர்கள் வாழும் நாடு இந்தியா. முன்பு, நாங்கள் மூன்றாவது, 4வது தலைமுறை தொழிலதிபர்களுக்குதான் கார்களை விற்றுவந்தோம். இப்போது எங்கள் கார்களை வாங்குவோர் முதல்தலைமுறை தொழிலதிபர்கள்,தொழில்முனைவோர், மற்றும் பெண்கள். எங்களின் வாடிக்கையாளர்கள் விரிவடைந்துவிட்டனர்” எனத் தெரிவித்தார்.

2022ம் ஆண்டில் ரூ.ஒரு கோடிக்கும் அதிகமான மெர்சடீஸ் பென்ஸ் கார்கள் விற்பனை 29 சதவீதம் அதிகரித்துள்ளது. 2018ம்ஆண்டில் விற்பனை 12 சதவீதம்தான் இருந்தது.

மெர்சடீஸ் பென்ஸ் நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் மார்டின் ஸ்வென்க் கூறுகையில் “ ரூ.ஒரு கோடிக்கும் அதிகமான விலையுள்ள 5 ஆயிரம் ஆர்டர்களில் மூன்றில் ஒருபகுதி இன்னும் நிலுவையில் உள்ளன. 2021ம் ஆண்டில் 2000 சொகுசு கார்களை விற்றோம்” எனத் தெரிவித்தார்.
 

click me!