ஜியோவை முடக்குகிறது டிராய்........கேள்விமேல்  கேள்வியால்  ஜியோ திணறல்....!!!

Asianet News Tamil  
Published : Oct 15, 2016, 08:44 AM ISTUpdated : Sep 19, 2018, 03:02 AM IST
ஜியோவை முடக்குகிறது டிராய்........கேள்விமேல்  கேள்வியால்  ஜியோ திணறல்....!!!

சுருக்கம்

ஜியோவை முடக்குகிறது டிராய்........கேள்விமேல்  கேள்வியால்  ஜியோ திணறல்....!!!  

ஜியோவை பற்றி நன்கு  அறிந்த  நமக்கு, சில  கேள்விக்கு மட்டும் பதில் தெரியாமல்  இருப்போம். இப்போ  அந்த  கேள்வியை , ஜியோவிடம்   முன்வைத்துள்ளது  டிராய்!!

ஜியோ விளம்பரங்களில் இலவச வாய்ஸ் கால் பெறுங்கள் என கூறிவிட்டு, சிம் பேக்கில் ஒரு வாய்ஸ் கால்-க்கு ரூ 1.20 வசூலிக்கப்படும் என போடப்பட்டுள்ளது....ஏன் என  விளக்கம் கேட்டுள்ளது டிராய்..!!!

அதாவது ஜியோ சிம் பேக்கில், ஒரு வாய்ஸ் கால்-க்கு ரூ 1.20 வசூலிக்கப்படும் என  தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து மேலும், பல்வேறு சலுகை திட்டங்கள் குறித்தும், தொலைதொடர்பு நிறுவனத்தின் 2014ல் இயற்றப்பட்ட திருத்தங்களை பின்பற்றுகின்றதா என்பது குறித்தும் ஜியோ நிறுவனத்தின் மூத்த அதிகாரிகளை டிராய் அதிகாரிகள் சந்தித்து விளக்கம்   கேட்டுள்ளனர்.

2014ல் இயற்றப்பட்ட திருத்தங்களின் படி பரஸ்பரமாக ஒரு நெட்வொர்க் மற்ற நெட்வொர்க்குக்கு  இணைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இதற்கு  ஒரு கால்-க்கு 14 பைசா வசூலித்துக்கொள்ளலாம் என கூறியுள்ளது. ஆனால், ஜியோ இந்த  விதிக்கு முரண்பாடாக உள்ளது என ட்ராய்  தெரிவித்துள்ளது.

.இந்நிலையில், ஜியோவின் இலவச வாய்ஸ் கால்களால், மற்ற நெட்வொர்க் டவர்கள் ஜியோ வாடிக்கையாளர்களால் நீண்ட நேரம்பயன்படுத்தப்படுவதால், மற்ற நெட்வொர்க் வாடிக்கையாளர்களுக்கு சரியான இணைப்பு வழங்கப்படுவது கடினமாகிறது என ஜியோ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனை  தொடர்ந்து  பல  விளக்கத்தை  முன்வைக்க  தயாராகி  வருகிறது  ஜியோ .....!!!

 

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரயில் டிக்கெட் கேன்சல்.! இப்படி பண்ணா ரீ ஃபண்ட் கிடைக்காது.! பொதுமக்கள் வயிற்றில் அடிக்கும் ரயில்வே.! ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்.!
மக்களுக்கு நிம்மதி.. பெட்ரோல், டீசல் குறையப்போகுதா? கலால் வரி ரூ.10 குறைத்த மத்திய அரசு!