அம்பானிக்கு மரண பயம் காட்டும் மர்ம நபர்! ரூ.400 கோடி தராவிட்டால் தலை தப்பாது என மீண்டும் மிரட்டல்!

By SG Balan  |  First Published Oct 31, 2023, 11:59 AM IST

சனிக்கிழமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வந்த மூன்றாவது ஈமெயிலில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ரூ.400 கோடி கேட்டு கொலை மிரட்டல் வந்துள்ளது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடம் இருந்து ரூ.400 கோடி கேட்டு மீண்டும் மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளதாக போலீசார் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

அம்பானியின் நிறுவனத்திற்கு திங்கள்கிழமை இந்த மின்னஞ்சல் வந்துள்ளது. நான்கு நாட்களில் அம்பானிக்கு அனுப்பப்பட்ட மூன்றாவது மிரட்டல் மின்னஞ்சல் இது என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Tap to resize

Latest Videos

முன்னதாக,  இதே அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து ரூ.20 கோடி கேட்டு முதல் மின்னஞ்சல் வந்தது. இது பற்றி அம்பானியின் பாதுகாப்புப் பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், காம்தேவி காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது.

எலான் மஸ்க் செய்த சம்பவம்... மரண அடி வாங்கிய எக்ஸ்! ட்விட்டரை தீர்த்துக் கட்டத்தான் இந்த பிளானா?

சனிக்கிழமை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மீண்டும் அதே நபரிடம் இருந்து ரூ.200 கோடி கேட்டு மற்றொரு மின்னஞ்சல் வந்தது. முதல் மெயிலுக்கு பதில் வராததால் தொகையை உயர்த்தி இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், திங்கட்கிழமை மூன்றாவது மின்னஞ்சல் வந்திருக்கிறது. அதில் மறுபடியும் டிமாண்ட் செய்யும் தொகையை டபுள் ஆக்கி ரூ.400 கோடி கோரியிருப்பதாக காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகிறார். மும்பை காவல்துறை, க்ரைம் பிரிவு மற்றும் சைபர் குழுக்கள் மின்னஞ்சல் அனுப்பியவரைக் கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

மூன்று மின்னஞ்சல்களும் பெல்ஜியத்தில் இருந்து ஒரே ஈமெயில் ஐடியிலிருந்து அனுப்பப்பட்டவை என்று போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அனுப்பியவர் ஷதாப் கான் எனவும் தெரிந்துள்ளது.

கடந்த ஆண்டும், அம்பானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு கொலை மிரட்டல் அழைப்பு விடுத்ததற்காக பீகாரின் தர்பங்காவை சேர்ந்த ஒருவரை மும்பை போலீசார் கைது செய்தனர். மும்பையில் உள்ள சர் எச் என் ரிலையன்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையை வெடி வைத்துத் தகர்க்கப் போவதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிரட்டினர்.

சாம்சங் E700 ஞாபகம் இருக்கா? கேலக்ஸி சீரீஸில் ரெட்ரோ ஸ்டைலில் புதிய ஸ்மார்ட்போன்!

click me!