
Indian stock market: இந்தியப் பங்குச் சந்தை தொடர்ந்து கடந்த சில வாரங்களாக சரிந்து காணப்படுகிறது. பிஎஸ்இ சென்செக்ஸ் 1,414 புள்ளிகள் அல்லது 1.9% சரிந்து 73,198 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 420 புள்ளிகள் அல்லது 1.86% சரிந்து 22,124 ஆகவும் முடிந்தது. Mumbai Stock Exchange-ல் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் ரூ.8.9 லட்சம் கோடி குறைந்து ரூ.384.22 லட்சம் கோடியாக இருந்தது. செப்டம்பர் மாத இறுதியில் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நிகர அடிப்படையில் சுமார் 25 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்திய பங்குகளை விற்றுள்ளனர், அதில் 4.1 பில்லியன் டாலர் பிப்ரவரியில் விற்பனை செய்யப்பட்டதாகும்.
சிப்மேக்கர் என்விடியாவின் சரிவைத் தொடர்ந்து நிஃப்டி ஐடி குறியீட்டு பங்குகள் 6.5% வரை சரிந்தன. டெக் மஹிந்திரா, விப்ரோ மற்றும் எம்பாசிஸ் ஆகிய பங்குகளும் சரிவை சந்தித்தன. இதற்கிடையில், நிஃப்டி ஆட்டோ குறியீடு கிட்டத்தட்ட 4% சரிந்தது. அதே நேரத்தில் நிஃப்டி வங்கி, உலோகம், மீடியா, எஃப்எம்சிஜி, பார்மா, ரியாலிட்டி, நுகர்வோர் சாதனங்கள் மற்றும் எண்ணெய் & எரிவாயு குறியீடுகள் 0.7%-3.5% சரிந்துள்ளன.
டொனால்ட் டிரம்ப் வரி விதிப்பால்.. பாதாளத்துக்கு செல்லும் இந்திய பங்குச்சந்தைகள்!
சென்செக்ஸ், நிப்டி சரிவுக்கு காரணங்கள் என்ன?
GDP - மொத்த உள்நாட்டு உற்பத்தி குறைவு
குறைவான பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. வருமானம் குறைந்து காணப்படுவது, டிரம்பின் வரிக் கொள்கை, தொடர்ந்து வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை விற்றுச் செல்வது போன்ற காரணங்களால், பெஞ்ச்மார்க் 14% குறைந்துள்ளது. இதற்கிடையில், முதலீட்டாளர்கள் வெள்ளிக்கிழமை சந்தை நேரத்திற்குப் பின்னர் வெளியிடப்படவுள்ள டிசம்பர் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். இந்தியாவின் பொருளாதாரம் காலாண்டில் மீட்சியடைய வாய்ப்பு இருப்பதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
PM கிசான் திட்டம்னா என்ன? யார் பயன் பெறலாம்? எப்படி பதிவு செய்யணும்?
2) டிரம்பின் வரி கொள்கையில் நிச்சயமின்மை:
முன்பு கனடா, மெக்சிகோவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது ஏப்ரல் 2 ஆம் தேதி 25% வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் முன்பு கூறி இருந்தார். இதற்கு பதிலாக, தற்போது இந்த வரி விதிப்பு வரும் மார்ச் 4 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று டிரம்ப் வியாழக்கிழமை அறிவித்தார். கூடுதலாக, அவர் சீனப் பொருட்களுக்கு 10% வரியை விதித்தார் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதிக்கப்படும் என்ற தனது வாக்குறுதியை மீண்டும்உறுதி செய்தார். வர்த்தகக் கொள்கைகளைச் சுற்றியுள்ள இந்த கணிக்க முடியாத நிலை சந்தை ஏற்ற இறக்கத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.
3. அழுத்தத்தில் பங்குச் சந்தை, Dollar Index:
இந்தியப் பங்குச் சந்தை மட்டுமின்றி உலகப் பங்குச் சந்தையும் நிச்சயமற்ற நிலையில், கடந்த நான்கு வாரங்களுக்குப் பின்னர் பெரிய அளவில் இந்த வார இறுதியில் முடிந்துள்ளது. அதிகரித்து வரும் வர்த்தகப் போர் முதலீட்டாளர்களை ஆலோசிக்க வைத்துள்ளது. முக்கிய நாணயங்களுக்கு எதிராக அமெரிக்க டாலர் இன்டெக்ஸ் உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலர் குறியீடு வெள்ளிக்கிழமை 107.36 ஆக உயர்ந்தது. இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு அமெரிக்க டாலரின் வலுவான நிலை எதிர்மறையாக அமையும். ஏனெனில் இது வெளிநாட்டு முதலீடுகளின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால், பங்குகளை விற்றுச் செல்ல வேண்டிய சூழலுக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்படுகின்றனர்.
4. வெளிநாட்டு முதலீட்டாளர்கள், DII investment:
NSDL தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் இதுவரை, வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்கள் ரூ.1,13,721 கோடி மதிப்புள்ள இந்தியப் பங்குகளை நிகர அடிப்படையில் விற்பனை செய்துள்ளனர். பிப்ரவரியில் இதுவரை, FIIகள் ரூ.47,349 கோடி மதிப்புள்ள இந்தியப் பங்குகளை விற்றுள்ளனர். அதே நேரத்தில் DII, உள்நாட்டு முதலீட்டாளர்கள் ரூ.52,544 கோடி அளவிற்கு பங்குகளை வாங்கி இருக்கின்றனர் அல்லது முதலீடு செய்துள்ளனர்.
அக்டோபர்-டிசம்பர் 2024 காலாண்டு GDP வளர்ச்சி:
மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடும்போது வளர்ச்சி குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.2 சதவீதமாகக் குறைந்துள்ளது, இதற்கு சுரங்கம், உற்பத்தி மற்றும் பிற துறைகளில் பிரதிபலித்த குறைவான செயல்திறனே காரணமாகும். அதே நேரத்தில் விவசாயம் நேர்மறையான வளர்ச்சியை காட்டியுள்ளது. முந்தைய காலாண்டின் வளர்ச்சி விகிதமான 5.6 சதவீதத்துடன் ஒப்பிடும்போது பொருளாதாரம் முன்னேற்றம் காணப்படுகிறது.
வெள்ளிக்கிழமை தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்ட தரவுகளின்படி, அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 9.5 சதவீதமாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.