
வாரத்தின் நான்காவது வர்த்தக தினமான இன்று இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சியை சந்தித்தது.
அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச் சந்தைகளின் சரிவு காரணமாக இந்திய பங்குச் சந்தையிலும் சரிவு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை கால் சதவீதம் குறைத்து, பின்னர் இதே நிலை தொடர்ந்து நீடிக்காது என அறிவிப்பு வெளியிட்டதால் அமெரிக்க பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆசிய பங்குச் சந்தையில் பங்கு விலை கடும் சரிவை கண்டது.
அதன் படி மும்பை பங்குசந்தையான சென்செக்ஸ் (-462.80 ) 1.23% குறைந்து 37,018.32 புள்ளிகளில் நிலை கொண்டு உள்ளது.
தேசிய பங்குசந்தையான NIFTY 50 (-105.40) -1.24% புள்ளிகள் குறைந்து, 10,980.00 புள்ளிகளில் நிலை கொண்டு உள்ளது
லாபம் கண்ட நிறுவனங்கள்
Maruti,wipro,infratel,powergrid,reliance
நஷ்டம் கண்ட நிறுவனங்கள்
Vedl,jswsteel,sbin,tata motors,hindalco
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.