Russia Ukrain Crisis:உக்ரைன்-ரஷ்ய போர்: இந்திய ஏற்றுமதிக்கு கடும்பாதிப்பு: நிர்மலா சீதாராமன் கவலை

By Pothy RajFirst Published Feb 28, 2022, 5:05 PM IST
Highlights

உக்ரைன்-ரஷ்யப் போரால் இந்தியாவின் ஏற்றுமதிக்குக் கடும் பாதிப்பு வரும் என்று மத்திய அரசு வேதனைப்படுகிறது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உக்ரைன்-ரஷ்யப் போரால் இந்தியாவின் ஏற்றுமதிக்குக் கடும் பாதிப்பு வரும் என்று மத்திய அரசு வேதனைப்படுகிறது என்று மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர்தொடுத்து தொடர்ந்து 5-வது நாளாக சண்டையிட்டு வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான போரால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் 100 டாலருக்கும் மேல் அதிகரித்துவிட்டது. இதனால் 5 மாநிலத் தேர்தல் முடிந்தபின் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்துவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது.

அதுமட்டுமல்லாமல் ரஷ்யா, உக்ரைனிலிருந்து இந்தியா ஏராளமான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது, இறக்குமதியும் செய்கிறது. இந்தப் போரால் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக தேயிலை ஏற்றுமதி, மருந்துப் பொருட்கள் ஏற்றுமதி, வேளாண் பொருட்கள் ஏற்றுமதி, ரசாயன உரங்கள் இறக்குமதி, நிலக்கரி, கச்சா எண்ணெய் இறக்குமதி போன்றவை பாதிக்கப்படக்கூடும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் ரஷ்ய-உக்ரைன் போரால் இந்தியாவுக்கு நேரடியாக பாதிப்பு ஏற்படாது என்றாலும், மறைமுக பாதிப்பு ஏற்படக்கூடும். குறிப்பாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் உயர்வு, அதன் தொடர்ச்சியாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு, அதைத்தொடர்ந்து உணவுப்பொருட்கள் ப ணவீக்கம், சில்லரை பணவீக்கத்தில் முடியும்.  இதனால் இந்த போரால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறித்து மதிப்பிட முடியாமல் மத்திய அரசுஅதிகாரிகள் திணறுகிறார்கள். 

இந்நிலையில்மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் இன்று நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவரியம் ரஷ்யா-உக்ரைன் போரால் இந்தியாவுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில் “ ரஷ்யா-உக்ரைன் போரால், இந்தியாவின் ஏற்றுமதியில் ஏற்படும் பாதிப்பைப் பற்றிதான் மத்தியஅரசு கவலைப்படுகிறது. ஏற்றுமதி, இறக்குமதியில் ஏதேனும பணம் செலுத்துவதில் சிரமங்கள் இருக்கிறதா என ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களிடம் கேட்டுள்ளோம்.

மருந்துத்துறை ஏற்றுமதி, உக்ரைன், ரஷ்யாவிலிருந்து ரசாயன உரங்கள் இறக்குமதி பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது. இரு நாடுகளுக்கு இடையே நடக்கும் போரால் சில சுமைகளை அரசு தாங்குகிறது. குறிப்பாக ஏற்றுமதி இறக்குமதி சுமைகள். மத்தியஅரசின் கவலை என்பது, உக்ரைன், ரஷ்யாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்கள் குறித்துதான்.

நம்முடைய ஏற்றுமதியாளர்கள் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து கவலையாக இருக்கிறது. குறிப்பாக ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பப்படும் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி நிலை கவலையாக இருக்கிறது. பல்வேறு அமைச்சகங்களிடம் கூறி, நிலையை ஆய்வு செய்யக் கேட்டிருக்கிறேன். 

இவ்வாறு சீதாராமன் தெரிவித்தார்.
 

click me!