
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவில் சட்டவிரோதமான ஆன்லைன் சூதாட்டம் வேகமாக அதிகரித்துள்ளன. டிஜிட்டல் இந்தியா அறக்கட்டளையின் அறிக்கையின்படி, நான்கு முக்கிய வலைத்தளங்கள் மூன்று மாதங்களில் 1.6 பில்லியன் வருகைப் பதிவுகளை பெற்றுள்ளன.
இந்த வருகைகளில் பெரும்பாலானவை இயற்கையானவை என்றும், அவை 184 மில்லியனைத் தாண்டுவதாகவும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. இதில் 42.8 மில்லியன் வருகைகள் சமூக ஊடக தளங்கள் மூலம் வந்தவை என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மிரர் வலைத்தளங்களும் வளர்ந்து வரும் சட்டவிரோத சந்தையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மூன்று பரிமேட்ச் மிரர் தளங்கள் மட்டுமே கூடுதலாக 266 மில்லியன் வருகைகளைப் பதிவுசெய்துள்ளன. இது ஆன்லைன் சூதாட்டம் கட்டுப்பாடற்ற அளவுக்குப் பெருகியிருப்பதைக் காட்டுகிறது.
"இணையதளங்களை முடக்குவது உள்பட மீண்டும் மீண்டும் அரசு பல நடவடிக்கைகள் எடுத்தாலும் சட்டவிரோத இணையதளங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேம்பட்ட டிஜிட்டல் சந்தைப்படுத்தல் உத்திகள், தடையற்ற கட்டண செயலாக்கம் மற்றும் மிரர் வலைத்தளங்களைப் பயன்படுத்துவது ஆகியவை இவர்களின் வளர்ச்சிக்குக் காரணமாக உள்ளன" என்று அறிக்கை கூறியது.
அரசு மானியத்துடன் புது வீடு கட்டலாம்! அரசுத் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
"முக்கிய டிஜிட்டல் தளங்கள் சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களைத் தடை செய்தாலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது சீரற்றதாகவே உள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பேஸ்புக்கின் விளம்பர நெட்வொர்க்கில் விளம்பரங்கள் அதிவேகமாக வளர்ந்துள்ளன" என்றும் அறிக்கை குறிப்பிடுகிறது.
2023ஆம் ஆண்டில் நிதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, பணமோசடி மற்றும் பயங்கரவாத நிதியுதவியை எளிதாக்கும் ஆன்லைன் சூதாட்டத் தளங்கள் குறித்தும் முக்கிய கவலைகளை எழுப்பியது.
சட்டவிரோத தளங்களுக்கு 1.098 பில்லியன் வருகைகள் வலைத்தள URL களை நேரடியாக உள்ளிடும் வழியில் வந்துள்ளன என்றும் அறிக்கை கண்டறிந்துள்ளது. இது கடந்தகால சந்தைப்படுத்தல் முயற்சிகளின் நீடித்த தாக்கத்தைக் குறிக்கிறது.
ஆன்லைன் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் வலைத்தளத்தை பிளாக் செய்து மட்டும் போதாது என்பது நிரூபணமாகியுள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக, இங்கிலாந்து, நோர்வே, டென்மார்க், பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டியுள்ளது. சந்தைப்படுத்தல் தடை, பரிவர்த்தனை தடை, பிளாக்லிஸ்டுகள் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் மூலம் இந்த நாடுகள் ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்துவதில் வெற்றியைக் கண்டுள்ளன.
இந்த வளர்ந்து வரும் இந்த சவாலை எதிர்கொள்ள, தற்போதைய உத்திகளுக்கு அப்பால் நகர்ந்து, மாறுபட்ட அணுகுமுறையின் அவசியத்தை அறிக்கை வலியுறுத்துகிறது. டிஜிட்டல் மீடியா தளங்களில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தல், சட்டவிரோத பரிவர்த்தனைகளைத் தடுக்க கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துதல், சட்டவிரோத சூதாட்ட நெட்வொர்க்குகளை நீண்டகாலம் தடைசெய்யும் வழிமுறைகள் ஆகிய தீர்வுகளையும் அறிக்கை பரிந்துரைக்கிறது.
பிஎஃப் பேலன்ஸ் எவ்வளவு? இந்த நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தா போதும்!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.