இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி, அவரது குழந்தைகள், அவரது குடும்ப உறுப்பினர்களின் சொத்து மதிப்பு குறித்து இங்கு காணலாம்
இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் முகேஷ் அம்பானி, இந்தியாவில் உலக பெரும் பணக்காரர் என்ற பட்டத்தையும் கொண்டிருப்பவர். ஃபோர்ப்ஸ் பட்டியலின்படி, அவரது நிகர சொத்து மதிப்பு 108 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவரது குழந்தைகள் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்து பலருக்கும் தெரியாமல் இருக்கலாம். அதுகுறித்துதான் இந்த பதிவு.
முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி, அந்த தம்பதியின் மூன்று பிள்ளைகளான இஷா, ஆனந்த், ஆகாஷ் அம்பானி மற்றும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களின் நிகர சொத்து மதிப்பு குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
இஷா அம்பானி ரூ.831 கோடி
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி. 32 வயதான அவர், ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் தலைவராவார். ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் ஜியோ, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் திருபாய் அம்பானி சர்வதேச பள்ளி ஆகியவற்றின் நிர்வாகத் தலைமைக் குழுக்களின் ஒரு பகுதியாகவும் அவர் உள்ளார். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாகமற்ற இயக்குநராகவும் அவர் உள்ளார்.
டிவிடெண்ட் லாபத்தைத் தவிர்த்து, அவரது ஆண்டு சம்பளம் சுமார் ரூ. 4.2 கோடி என்று கூறப்படுகிறது. இஷா அம்பானியின் நிகர மதிப்பு 100 மில்லியன் அமெரிக்க டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.831 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆகாஷ் அம்பானி: ரூ.3,33,313 லட்சம் கோடி
முகேஷ் அம்பானியின் மூத்த மகனான ஆகாஷ் அம்பானியும், மகள் இஷா அம்பானியும் இரட்டை சகோதரர்கள் ஆவர். இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக ஆகாஷ் அம்பானி உள்ளார். ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் குழுவில் இயக்குநராகவும் உள்ளார். அவரது ஆண்டு சம்பளம் ரூ. 5.4 கோடி. ஆகாஷ் அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 40.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ரூ.3,33,313 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தல் 2024: ராதிகா சரத்குமார் சொத்து மதிப்பு என்ன?
அனந்த் அம்பானி: ரூ.3,32,482 லட்சம் கோடி
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் எரிசக்தி வணிகங்களுக்கும், புதுப்பிக்கத்தக்க மற்றும் பசுமை எரிசக்தியில் அதன் உலகளாவிய செயல்பாடுகளுக்கும் தலைமை தாங்குகிறார். ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் மற்றும் ரிலையன்ஸ் ரீடெய்ல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஆகியவற்றின் குழுவில் இயக்குனராகவும் ஆனந்த் அம்பானி செயல்பட்டு வருகிறார்.
ஆனந்த் அம்பானியின் ஆண்டு சம்பளம் ஆண்டுக்கு ரூ.4.2 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரது நிகர சொத்து மதிப்பு சுமார் 40 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில் ரூ 3,32,482 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஸ்லோகா மேத்தா: ரூ 149 கோடி
நகை வியாபாரி ரஸ்ஸல் மேத்தாவின் மகள் ஸ்லோகா மேத்தா. இவர், முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானியை திருமணம் முடித்துள்ளார். முகேஷ் அம்பானியின் மூத்த மருமகளான ஸ்லோகா மேத்தாவின் தந்தை ரஸ்ஸல் மேத்தாவின் நிகர சொத்து மதிப்பு 225 மில்லியன் அமெரிக்க டாலர்கள். அதேசமயம், ஸ்லோகா மேத்தாவின் நிகர சொத்து மதிப்பு ரூ. 149 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
ராதிகா மெர்ச்சண்ட்: ரூ.10 கோடி
தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகளான ராதிகா மெர்ச்சன்ட், முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானியை விரைவில் திருமணம் முடிக்கவுள்ளார். இவர்களது திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் நாடே திரும்பும் வகையில் இம்மாத தொடக்கத்தில் குஜராத் மாநிலம் ஜாம் நகரில் நடைபெற்றது. ராதிகா மெர்ச்சன்ட்டின் நிகர மதிப்பு ரூ.10 கோடி எனவும், அவரது தந்தை வீரேன் மெர்ச்சண்டின் நிகர சொத்து மதிப்பு ரூ.755 கோடி எனவும் கூறப்படுகிறது.
ஆனந்த் பிரமல்: ரூ.44,051 ஆயிரம் கோடி
பிரமல் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஆனந்த் பிரமல், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் கணவர் ஆவார். பிரமல் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநராக இருக்கும் ஆனந்த் பிரமல், முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானியின் கணவர் ஆவார். ஆனந்த் பிரமலின் நிகர சொத்து மதிப்பு தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு ஃபோர்ப் வெளியிட்ட தகவலின்படி, அவரது சொத்து மதிப்பு 5.38 பில்லியன் அமெரிக்க டாலர்கள். அதாவது இந்திய மதிப்பில், ரூ. 44,051 கோடி என மதிப்பிடப்பட்டது.
நீடா அம்பானி
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மனைவியான நீடா அம்பானிக்கு அறிமுகம் தேவையில்லை. ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவராக நீடா அம்பானி செயல்பட்டு வருகிறார். கடந்த 2022-23 நிதியாண்டு நிலவரப்படி, நீடா அம்பானிக்கு அமர்வுக் கட்டணமாக சுமார் ரூ.6 லட்சம் மற்றும் ரூ.2 கோடி கமிஷன் வழங்கப்பட்டுள்ளது. நீடா அம்பானியின் நிகர சொத்து மதிப்பு 2.8 முதல் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.