India GDP Growth: இந்தியாவின் ஜிடிபி 4-வது காலாண்டில் 4.1% வளர்ச்சி: கடந்த நிதியாண்டில் 8.7 % வளர்ச்சி

By Pothy RajFirst Published Jun 1, 2022, 7:47 AM IST
Highlights

India GDP Growth: india gdp :கடந்த 2021-22 நிதிஆண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது மாதமாக வளர்ச்சி குறைந்துள்ளது.

India GDP Growth: கடந்த 2021-22 நிதிஆண்டின் கடைசி காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.1 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக தொடர்ந்து 3-வது மாதமாக வளர்ச்சி குறைந்துள்ளது.

தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “ நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2021-22 நிதியாண்டில் 8.7 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், பிப்ரவரி மாதம் 8.8 சதவீதம் வளரும் எனக் கணத்திருந்தோம். கடந்த நிதியாண்டில் வர்தத்கம், ஹோட்டல்கள், தகவல்தொடர்புத்துறை ஆகியவற்றைத் தவிர மற்ற துறைகள் அனைத்தும் கொரோனாவுக்கு முந்தைய கட்டத்தை அடைந்துள்ளன

தனியார் துறை நுகர்வு அல்லது தனியார் துறை செலவிடுதல் கடந்த நிதியாண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான கடைசி காலாண்டில் 1.8 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், மத்திய அரசு செலவிடுதல் என்பது 4.8சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 
ஆனால், சப்ளை பகுதியில் உற்பத்தி துறை 0.2 சதவீதம் கடந்த நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் குறைந்துள்ளது. வேளாண்துறை வளர்ச்சி 4.1 சதவீதம்வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால், நடப்பு ஆண்டில் கடும் வெப்பம் காரணமாக கோதுமை விளைச்சல் பாதிக்கப்படலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மார்ச் காலாண்டில் கட்டுமானத்துறை சாதமான நிலைக்கு திரும்பி 2சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதேநேரம் சேவைத்துறை வளர்ச்சி 5.5சதவீதம் மட்டுமே வளர்ந்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக வர்த்தகம், ஹோட்டல்,தகவல்தொடர்பு ஆகியவை மந்தமடைந்தது. 

நாட்டின் ஜிடிபி குறித்து மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் கூறுகையில் “ சமீபத்தில் வெளிப்படும் பொருளாதார சமிக்ஞைகள் அனைத்தும், உள்நாட்டில் தேவை வலுவடைந்து வருகிறது, உற்பத்தி துறை சூடுபிடிக்கிறது , பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கிறது என்பதைக் காட்டுகிறது.

பருவமழை இயல்பாகஇருந்தால், விவசாயிகளுக்கு 2022-23 கரீப் பருவத்தில் வருமானம்உயரக்கூடும். வரும் மாதங்களில் கிராமங்களில்கூட வேளாண் உற்பத்தி அதிகரி்க்கும், சிறந்த விலை விளைபொருட்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சிறந்தபருவமழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, அவ்வாறு இருந்தால் அரசின் கிராமப் பொருளாதார வளர்ச்சி கொள்கை உறுதுணையாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்

click me!