10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை; இந்தியா-யுஏஇ இடையே வர்த்தக ஒப்பந்தம் அம்சங்கள் என்ன!

Published : Feb 19, 2022, 11:26 AM ISTUpdated : Feb 19, 2022, 11:28 AM IST
10 லட்சம் இளைஞர்களுக்கு வேலை; இந்தியா-யுஏஇ இடையே  வர்த்தக ஒப்பந்தம் அம்சங்கள் என்ன!

சுருக்கம்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்(சிஇபிஏ) நேற்று கையொப்பமானது. இதன் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 10ஆயிரம் கோடி டாலராக உயரும்

இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம்(சிஇபிஏ) நேற்று கையொப்பமானது. இதன் மூலம் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவார்கள், இருநாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 10ஆயிரம் கோடி டாலராக உயரும்

கடந்த 7 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையே நடந்த மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் இதுவாகும். மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், அபுதாபி இளவரசர் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் இடையே இந்த ஒப்பந்தம் கையொப்பமானது.

இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்துத் தெரிவித்தார். அவர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியில் “ வளைகுடா நாட்டின் முதலீடு ஜம்மு காஷ்மீர் வரை செல்லட்டும். இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையிலான புதிய நிதிஉறவை உருவாக்கும். அடுத்த 5 ஆண்டுகளில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் 6000 கோடி டாலரிலிருந்து 10ஆயிரம் கோடி டாலராக உயரும்” எனத் தெரிவித்தார்.

மத்திய வர்த்தகத்துறை பியூஷ் கோயல் கூறுகையில் “ இருநாடுகளுக்கு இடையிலான வர்தத்கம் இரு நாடுகளில் இருக்கும் ஏற்றுமதியாளர்கள், இறக்குமதியாளர்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பை வழங்கும்.  விலை உயர்ந்த கற்கள், தங்க நகைகள், தோல் பொருட்கள், பிளாஸ்டிக் பொருட்கள், வேளாண்பொருட்கள், மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ஆட்டோமொபைல் பாகங்கள் தயாரிப்பு போன்றவை இந்த ஒப்பந்தத்தின் மூலம் பயன் பெறும். ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தங்கத்தை ஏற்றுமதி செய்வோருக்கு வரிச்சலுகைகளை இந்தியா வழங்குகிறது, இந்திய ஏற்றுமதியாளர்கள் நகைகளை ஏற்றுமதி செய்தால், அவர்களுக்கு வரிவிலக்கு வழங்கப்படும். சில பொருட்களை பட்டியலில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளது, அந்த பொருட்களுக்கு வரி விரைவில் குறைக்கப்படும்” எனத் தெரிவித்தார்

ஒப்பந்தத்தின் அம்சங்கள் பற்றி அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் “  இரு நாடுகளுக்கு இடையிலான இந்த விரிவான வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் உள்ள சிறு,குறு,நடுத்தர தொழில்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். ஏறக்குறைய 10லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும். இரு நாட்டு பொருளாதாரம், மக்களுக்கும் கிடைத்த வெற்றி இந்த ஒப்பந்தம்.

மருந்துத்துறையைப் பொறுத்தவரை, வளர்ந்த நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளை, மருந்துப் பொருட்களை விற்பனை செய்யவும் அனுமதித்துள்ளது. இதற்கான அனுமதியும் 90 நாட்களில் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. 

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பெட்ரோலியம் பொருட்கள்,விலைஉயர்ந்த உலோகங்களான நகைகளில் பதிக்கப்படும் கற்கள், ரத்தினங்கள், நகைகள், தாதுக்கள், உணவுப் பொருட்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, பழங்கள், காய்கறிகள், தேயிலை, மாமிசம், கடல்உணவுகள், ஜவுளிகள், பொறியியல் சார்ந்த கருவிகள், எந்திரங்கள், ரசாயனங்களை அதிகமாக ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வரும் முதல்நாளில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இந்திய ஏற்றுதமியாளர்கள் ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு வரி இருக்காது. இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் 90% பொருட்களுக்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் பலன் கிடைக்கும். 
தற்போது இரு நாடுகளுக்கு இடையே 6ஆயிரம் கோடி டாலர் வர்த்தகம் நடந்து வருகிறது. இது அடுத்த 5 ஆண்டுகளில் 10ஆயிரம் கோடி டாலராக அதிகரி்க்கும்

ஐக்கிய அரபு அமீரக எல்லைப்பகுதி வழியாக பிற ஆசிய நாடுகளுக்கும், ஆப்பிரிக்க நாடுகளுக்கும் பொருட்களை பரிமாற்றம் செய்ய இந்தியாவுக்கு இந்த ஒப்பந்தம் வழி ஏற்படுத்திக்கொடுக்கிறது.

ஐக்கியஅரசு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள் ஜம்மு காஷ்மீரில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன. குறிப்பாக சரக்குப்போக்குவரத்து, மருத்துவமனை, விருந்தோம்பல், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முதலீட்டை இந்தியா வரவேற்கிறது” எனத் தெரிவித்தனர்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஆதார் அட்டைக்கு புதிய பாதுகாப்பு: இனி நகல் தேவையில்லை!
நெட்வொர்க் இல்லையா.? நோ கவலை.. ஆப் இல்லாமல் இப்போ ஈசியா பணம் அனுப்பலாம்