முகேஷ் அம்பானிக்கு புதிய கொலை மிரட்டல்... 20 கோடி பத்தாது... 200 கோடி தரணுமாம்!

By SG Balan  |  First Published Oct 29, 2023, 8:03 AM IST

வெள்ளிக்கிழமை அனுப்பிய மெயிலுக்கு பதில் வராததால் டிமாண்ட் செய்யும் தொகை ரூ.20 கோடியில் இருந்து ரூ.200 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு ரூ.200 கோடி கேட்டு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கேட்கும் தொகையைக் கொடுக்காவிட்டால் முகேஷ் அம்பானி சுட்டுக்கொல்லப்படுவார் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இதேபோன்ற மின்னஞ்சல் அனுப்பியவர் தனது முந்தைய மின்னஞ்சலில் ரூ.20 கோடி கேட்டிருந்தார். அதற்கு பதில் வராததால் டிமாண்ட் செய்யும் தொகையை ரூ.20 கோடியில் இருந்து ரூ.200 கோடியாக உயர்த்தி இருக்கிறார் என காவல்துறை சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

Tap to resize

Latest Videos

முன்னர் மிரட்டல் கடிதம் அனுப்பிய அதே மின்னஞ்சல் முகவரியில் இருந்து மற்றொரு மின்னஞ்சல் வந்திருக்கிறது என்றும் அதில், "எங்கள் மின்னஞ்சலுக்கு நீங்கள் பதிலளிக்கவில்லை. இப்போது ரூ.200 கோடி தரவேண்டும். இல்லையெனில் மரணம் நிச்சயம்" என்று கூறப்பட்டிருப்பதாக போலீசார் சொல்கின்றனர்.

ஜீரோ பேலன்ஸ் சேமிப்புக் கணக்கு.. டெபிட் & கிரெடிட் கார்டு இலவசமாக கிடைக்கும்.. முழு விபரம் இதோ !!

வெள்ளியன்று, முகேஷ் அம்பானிக்கு ரூ.20 கோடி கொடுக்காவிட்டால் சுட்டுக்கொல்லப்போவதாக மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. "20 கோடி ரூபாய் தராவிட்டால், உன்னை கொன்று விடுவோம், இந்தியாவிலேயே சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்" என அந்த மிரட்டல் கடிதத்தில் கூறப்பட்டிருந்ததாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கொலை மிரட்டல் பற்றி முகேஷ் அம்பானியின் பாதுகாப்புப் பொறுப்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில், தெற்கு மும்பையில் உள்ள காம்தேவி போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் 387 மற்றும் 506 (2) ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை நடந்து வருகிறது.

26 பில்லியன் டாலரை வாரி இறைத்த கூகுள்! எல்லா இடத்திலும் குரோம் ஆதிக்கம் எப்படி வந்துச்சு தெரியுமா?

click me!