உச்சகட்ட ஐடியா ....!!! வரி செலுத்தாமல் இருக்க வங்கி கணக்கை பராமரிப்பது எப்படி ...?

Asianet News Tamil  
Published : Nov 29, 2016, 11:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:16 AM IST
உச்சகட்ட ஐடியா ....!!! வரி செலுத்தாமல் இருக்க வங்கி கணக்கை பராமரிப்பது எப்படி ...?

சுருக்கம்

உச்சகட்ட ஐடியா ....!!! வரி செலுத்தாமல் இருக்க வங்கி கணக்கை பராமரிப்பது எப்படி ...?

ரூபாய்   நோட்டு  குறித்த   பிரதமரின்  அதிரடி  அறிவிப்பை தொடர்ந்து,  கையில்  இருந்த  எல்லா  பணமும் தற்போது, வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது.

அதில் குறிப்பாக,  இரண்டரை  லட்சத்திற்கு   மேல் டெபாசிட்  செய்யப்பட்டிருந்தால், அதற்குண்டான  வரி செலுத்த  வேண்டும்  என  அறிவிக்கப்பட்டு  இருந்தது.

மேலும், அவ்வாறு டெபாசிட் செய்த  பணத்தில்,  கணக்கில்  வராத அதிக  பணம்  இருந்தால், அதற்கு  75 %  வரி   மற்றும் 10 %   அபராதம்  விதித்து , மசோதாவை, நிதியமைச்சர்  அருண் ஜெட்லி,  நேற்று மக்களவையில்  தாக்கல்  செய்தார்.

இந்நிலையில், சீட்டு  போட்டும் , விவசாயம்  செய்தும் , குருவி  போல்  சிறுக சிறுக  சேமித்து   வைத்த பணத்தையெல்லாம் வங்கியில்  டெபாசிட்  செய்து, அதற்கும்  வரியா என , விவரம்  தெரியா பாமர  மக்கள்  புலம்புவது தெரிகிறது....

இது போன்ற சமயத்தில், நம்  பணத்தை எப்படி வங்கி கணக்கில்  பராமரிப்பது  என , கணக்கு  தணிக்கையாளர் ஒருவர் ( ஆடிட்டர் }   கூறும்  விளக்கம்......

விளக்கம் :

உங்கள் வங்கிக் கணக்கின் AIR (Annual Information Report) வங்கியிலிருந்து Income tax Department ற்கு செல்லாமல் இருக்க கீழ்க்கண்டவாறு தங்களின் கணக்கை பராமரித்துக் கொள்ளவும்.

SB அக்கவுன்ட் என்றால் ,
*******************
ஒரு நாளைக்கு ரூ 49,000க்கு மிகாமலும், வருடத்திற்கு 9,90,000 க்கு மிகாமலும் பணம் டெபாசிட் செய்யவும்.

Current அக்கவுண்ட்டில்
************************
ஒரு நாளைக்கு ரூ 1,99,000க்கு மிகாமலும், வருடத்திற்கு 49,90,000 க்கு மிகாமலும் பணம் டெபாசிட் செய்யவும்.

கவனிக்க :
**********
மேற்படி தங்களின் Account ல் ஏப்ரல்1 ந் தேதியிலிருந்து இதுவரை எவ்வளவு டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது என்பதை கணக்கிட்டு பாக்கியை டெபாசிட் செய்து கொள்ளவும்.

 

மேற்குறிப்பிட்ட வாறு, நம் வங்கி  கணக்கில் பணத்தை  பராமரித்தால், ஆண்டு  வருமான  வரி செலுத்துவதிலிருந்து விலக்கு பெறலாம்.

குறிப்பு : மிதமான அளவில் வருமானம் பெறுபவர்களுக்கு  மட்டுமே  இது பொருந்தும்.....!!!

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

பான் கார்ட் வைத்திருக்கீங்களா..? 31ம் தேதிக்குள் இதை செய்யலேனா சிக்கலாகிடும்
Agriculture: இனி மழைக்காலத்திலும் தக்காளி அழுகாது.! விவசாயிகளுக்கு லாபம் தரும் புதிய தொழில்நுட்பம்!