சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு கூகுள் செலவிடும் பணத்தில் 15 பென்ஸ் கார் வாங்கலாம்!!

Published : May 01, 2025, 01:22 PM ISTUpdated : May 01, 2025, 01:35 PM IST
சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு கூகுள் செலவிடும் பணத்தில் 15 பென்ஸ் கார் வாங்கலாம்!!

சுருக்கம்

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு 2024ஆம் ஆண்டில் ரூ.67.8 கோடி செலவிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட அதிகம். வீட்டுப் பாதுகாப்பு, கன்சல்டேசன், கண்காணிப்பு, தனிப்பட்ட விமானம், பயணப் பாதுகாப்பு ஆகியவை இதில் அடங்கும்.

Sundar Pichai safety expenses google: இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் இன்று பெருமை சேர்த்துக் கொண்டு இருப்பவர் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை. இவருக்கு சம்பளம் அதிகம் ஆனால், இவரை பாதுகாப்பதற்கு கூகுள் செலவிடும் தொகையை பார்த்தால் அதிர்ச்சி ஆகிவிடுவீர்கள்.

சுந்தர் பிச்சையின் கூகுள் பயணம் 
Google CEO-வாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருபவர் சுந்தர் பிச்சை. இவருக்கு வழங்கப்படும் சம்பளம் அதிகம் என்றாலும், இவரது பாதுகாப்பு கூகுள் நிறுவனத்துக்கு முக்கியமாக இருக்கிறது. சமீபத்தில் கூகுள் நிறுவனம் அமெரிக்க பாதுகாப்பு மற்றும் எக்சேஞ்ச் கமிஷனுக்கு அறிக்கை ஒன்று தாக்கல் செய்து இருந்தது. அதில், கடந்த 2024ஆம் ஆண்டில் சுந்தர் பிச்சையின் பாதுகாப்புக்கு என்று கூகுள் நிறுவனம் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 67.8 கோடி ரூபாய் செலவழித்து இருப்பதை குறிப்பிட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு இவரது பாதுகாப்புக்கு கூகுள் நிறுவனம் ரூ. 57.48 கோடி செலவழித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

எதற்காக இத்தனை கோடி செலவு; ஆல்பாபெட் கருத்து 
கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் தெரிவித்து இருக்கும் தகவலில், வீட்டின் பாதுகாப்பு, கன்சல்டேசன் கட்டணம், கண்காணிப்பு கட்டணம், தனிப்பட்ட விமானம், பயண பாதுகாப்பு ஆகியவை அடங்கும் என்று தெரிவித்துள்ளது. "இந்த ஏற்பாடுகளும் செலவுகளும் நியாயமானவை, பொருத்தமானவை, அவசியமானவை மற்றும் ஆல்பாபெட் மற்றும் அதன் பங்குதாரர்களின் நலன்களுக்காகவே என்று கூறியுள்ளது. இவை எல்லாம் எங்களது வணிகத்திற்கு ஏற்படும் அபாயங்களைக் குறைக்கின்றன," என்று ஆல்பாபெட் நிறுவனம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. 

சுந்தர் பிச்சையின் அடிப்படை சம்பளம் என்ன?
ஆல்பபெட் நிறுவத்தின் 2025 ஆம் ஆண்டின் PROXY அறிக்கையின் படி, பிச்சை கடந்த ஆண்டில் 10.73 மில்லியன் டாலர் சம்பளம் பெற்றார். இது அவர் 2023-ஆம் ஆண்டில் பெற்ற 8.8 மில்லியன் டாலர் சம்பளத்தை விட உயர்வாகும். அவரது அடிப்படை சம்பளமாகும்  அது 2 மில்லியன் டாலர் என்று தெரிய வந்துள்ளது. 

கூகுள் ஊழியரின் சம்பளம் என்ன?
சராசரி முழுநேர கூகுள் ஊழியர் கடந்த ஆண்டு 331,894 டாலர் சம்பாதித்தார். இது 2023 ஐ விட 5% அதிகம். இது நல்ல உயர்வாகும். ஆனால், சுந்தர் பிச்சையின் சம்பளம் சராசரி ஊழியரின் சம்பளத்தை விட சுமார் 32 மடங்கு அதிகம்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

DG
About the Author

Dhanalakshmi G

செய்தித்தாள், டிஜிட்டல் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைத்துறையில் அனுபவம் பெற்றவர். தினமலர், தினமணி, டைம்ஸ் இன்டர்நெட் ஆகியவற்றில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். கோயம்புத்தூரில் இருக்கும் பிஎஸ்ஜி கலை அறிவியல் கல்லூரியில் எம்.ஏ., இதழியல் பட்டம் பெற்றவர். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட தருணத்தில் மாணவ பத்திரிக்கையாளராக தினமலரில் இருந்து சென்று இருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக செய்திகளை சமர்ப்பித்தவர். தற்போது ஏஷியா நெட் நியூஸ் தமிழ் டிஜிட்டல் மீடியாவில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். Digital technology புரிந்து கொண்டு பணியாற்றுவதில் ஆர்வம் உள்ளவர். கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் துறையில் பணியாற்றி வருகிறார். சமூக அக்கறை கொண்ட விழிப்புணர்வு சார்ந்த செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர். Explained, Opinion செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு