பணப்பிரச்சினை வராமல் இருக்க சீக்ரெட் டிப்ஸ்!

Published : May 31, 2025, 01:57 PM IST
Mahila Samman Savings Scheme

சுருக்கம்

கடன் பிரச்சினையிலிருந்து விடுபட்டு பணக்காரர் ஆக சில எளிய வழிகள் உள்ளன. அவசரகால நிதி, சொந்த வீடு, சேமிப்பு, காப்பீடு மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் போன்றவை இதில் அடங்கும்.

கடன் வாங்காமல் எதையும் வாங்க முடியாது என்ற நிலை தற்போது நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்களிடம் உள்ளது. இந்த நிலையில் சில விஷங்களை மட்டும் கடைபிடித்தால் பணப்பிரச்சினை எப்போதும் வராது என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். சின்ன சின்ன விஷயங்கள் உங்களை கடன் பிரச்சினையில் இருந்து வெளியேற்றி பணக்காரர் ஆக்கும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அவசரகால நிதி

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அவசரகால நிதிக்காக மாதா மாதம் ஒரு தொகையை ஒதுக்கிவைக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் குடும்பச் செலவுக்கு மாதம் எவ்வளவு தொகை தேவைப்படுகிறது என்பதை முதலில் தெரிந்தகொள்ள வேண்டியது அவசியம். வீட்டு வாடகை, மின் கட்டணம், மளிகைச் சாமான்கள், குழந்தைகளுக்கான தேவைகள், செல்போன் ரீசார்ஜ்கள், வேலை தொடர்பான பயணச் செலவுகள் போன்ற முக்கியச் செலவினங்கள் இதில் அடங்கும், இவற்றையெல்லாம் கூட்டிக்கழித்து இறுதியில் கிடைக்கும் உங்கள் மாதச் செலவுகளின் சராசரியைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அதன்படியான சுமார் பத்து மடங்குத் தொகையை அவசரகால நிதியாகச் சேர்ப்பதே உங்களின் முதல் நடவடிக்கையாக, இலக்காக இருக்கட்டும்.

கடனில் வாங்க வேண்டாம்

கடன் வழங்கும் நிறுவனங்கள், சலுகையுடன் கடன் தருகின்றன என்பதற்காக எந்த ஆடம்பரப் பொருளையும் வாங்கும் எண்ணத்துக்கு வராதீர்கள். வேலை பார்க்கும் நிறுவனம் தரும் சம்பளத்தை மனதில்கொண்டு, எல்லாப் பொருள்களையும் ஒரே நேரத்தில் இ.எம்.ஐ-யில் வாங்கிக் குவிக்காதீர்கள்.

தைரியத்தை கொடுக்கும் சொந்த வீடு

வாடகை என்பது இன்றைய குடும்பங்களின் கடினமான மாதச் செலவாக உருவெடுத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஒருவரின் மாத வருமானத்தின் 25% தொகை, அவரது வீட்டு வாடகைக்கே போய்விடுகிறது. உணவுக்காகச் சம்பாதிக்கிறோமோ இல்லையோ வீட்டு வாடகை தருவதற்காகவே சம்பாதிக்க வேண்டியிருக்கிறது.

எனவே, `குடும்பத்துடன் வசிப்பதற்கு ஒரு சொந்த வீடு அவசியம் வேண்டும்’ என்ற கொள்கையில் உறுதியாக இருங்கள். அதை அடைவதற்கான வழிகளில் உங்கள் கவனம் இருக்கட்டும். அப்படி நீங்கள் வாங்க நினைக்கும் வீட்டின் மதிப்பு, உங்கள் வருடாந்தர சம்பளத்தைப்போல ஐந்து அல்லது ஆறு மடங்காக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

சேமிப்பு முக்கியம்

உங்கள் எதிர்காலச் செலவுகளுக்கான பணத்தை இப்போதே சேர்க்கத் தொடங்குகள். சேமிப்பின் மூலமும் நீங்கள் பணம் சேர்க்கலாம்; முதலீட்டின் மூலமும் பணம் சேர்க்கலாம். `சேமிப்பு என்பது அசலுக்குப் பாதகம் தராதது. ஆனால், குறைவான லாபத்தைத் தருவது. இதற்கு உதாரணம், வங்கி எஃப்.டி., கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகள். ஆனால், முதலீடு என்பது குறுகியகாலத்தில் அசலுக்குக் கொஞ்சம் பாதகத்தை ஏற்படுத்தினாலும் நீண்டகாலத்தில் நல்ல லாபத்தைத் தரக்கூடியது. உதாரணமாக, பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த ஃபண்டுகள். உங்கள் தேவைக்கான பணம் எத்தனை ஆண்டுகள் கழித்துத் தேவை என்பதைப் பொறுத்து நீங்கள் உங்கள் முதலீட்டு வழியைத் தேர்வு செய்யலாம்.

இன்சூரன்ஸ் அவசியம்

இதுவரை இல்லையென்றாலும் இனியாவது மருத்துவக் காப்பீடு மற்றும் ஆயுள் காப்பீடு (டேர்ம் பிளான்) எடுப்பதில் அக்கறை காட்டுங்கள். ஊரடங்கு போன்ற எதிர்பாராத ஆபத்துக் காலங்களில் இந்தக் காப்பீடுகள் பெற்றுத் தரும் பாதுகாப்பு மிக அதிகம். வீட்டில் உள்ளவர்கள் உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டால் மருத்துவக் காப்பீடுகள் போலச் சமயத்தில் உதவுவது வேறெதுவும் இருக்க முடியாது.ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம் என்று அதிக தொகைக்கு மருத்துவக் காப்பீடு எடுக்க முடியாவிட்டாலும், ரூ.2 லட்சத்துக்காவது காப்பீடு எடுத்து குறைந்தபட்சப் பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். ஆயுள் காப்பீடு என்கிறபோது ஒருவரின் ஆண்டு வருமானத்தைப்போல் சுமார் 15 மடங்கு தொகைக்கு எடுத்துக்கொள்வது நல்லது.

டிஜிட்டல் பரிவர்த்தணை

மொபைல் பேங்க்கிங், இன்டர்நெட் பேங்க்கிங் போன்றவற்றைக் கற்றுக்கொள்ள முயலுங்கள். உங்களின் வங்கி வழிச் சேவைகளை வீட்டிலிருந்தே பெறவும், பயன்படுத்தவும் தெரிந்துகொள்ளுங்கள். இவற்றை அறிந்து கொள்வதற்குத் தயக்கம் காட்டாதீர்கள். நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் பழக்கமான அதிகாரிகளிடமோ, உங்களின் நம்பிக்கையான நண்பர்களிடமோ அதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு நீங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்புகொண்டும் விளக்கங்கள் பெற முடியும். முதலில் எல்லாமே புரியாததுபோலத்தான் இருக்கும். ஒரு முறைக்கு இரு முறை தொடர்ந்து முயலுங்கள்.

எளிதில் பணமாக்கும் முதலீடுகள்

மனை, தங்கம், தொழில், முதிர்வுத் தேதி வரை காத்திருக்கும் வரையான முதலீடு எனப் பல வழிகளில் செய்யப்படுவது நல்லது. முதலீட்டைப் பல வகைகளில் பரவலாக்கம் செய்வதில்தான் ஒரு முதலீட்டாளரின் வெற்றி அடங்கியிருக்கிறது. ஆனாலும், உங்கள் முதலீட்டின் மொத்த மதிப்பில் 20 சதவிகிதத்தையாவது உடனே ரொக்கமாக மாற்றக்கூடிய வகையைச் சார்ந்த முதலீடாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். வங்கிச் சேமிப்புக் கணக்கு, எஃப்.டி., மியூச்சுவல் ஃபண்ட் லிக்விட் ஃபண்டுகள் போன்றவை. இவற்றையெல்லாம் சரியாக செய்யும் பட்சத்தில் உங்களுக்கு செலவுகள் குறைந்து வருமானம் அதிக அளவு அதிகரிக்கும். அதேபோல் சேமிப்பு அதிகரித்து முதலீடுகள் உயரும்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு