பட்டா இல்லாத வீடு வைத்திருப்பவர்களா நீங்கள்.. ஆன்லைனிலேயே இனி பட்டா வாங்கலாம்.. எப்படி தெரியுமா?

By Raghupati R  |  First Published May 14, 2024, 10:34 PM IST

பட்டா இல்லாத வீடு வைத்திருப்பவர்கள் இனிமேல் நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்து பட்டா பெற்றுக் கொள்ளலாம்.


தமிழகத்தில், காலி மனை பத்திரங்களை பதிவு செய்வதற்காக, கள ஆய்வு எதுவுமே மேற்கொள்வதில்லை. ஒருசில இடங்களில், காலி மனை என்று குறிப்பிட்டு தாக்கலாகும் பத்திரங்களிலும், கட்டிடங்கள் மறைக்கப்படுவதால், பதிவுத்துறைக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுவிடுகிறது. எந்த இடத்தை வாங்க முயன்றாலும், அந்த இடத்திற்கான 30 வருட வில்லங்க சான்றிதழை சரிப்பார்க்க வேண்டும். குறிப்பிட்ட அந்த சொத்தின் உரிமையாளர் யார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ் இதுவாகும்.

அதாவது, நீங்கள் வாங்கப்போகும் நிலம், யார் வசம் இருந்து கைமாறி வந்தது? நீங்கள் வாங்க நினைக்கும் காலி மனை, வாரிசு பெயரில் இருக்கிறதா அல்லது வேறு யார் பெயரில் இருக்கிறது என்ற அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். காலி மனை வாங்கும்போது தாய்ப்பத்திரம், ஒரிஜினல் இருக்கிறதா என்று கவனிக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள். ஆட்சேபனையற்ற இடம் என்றால் பட்டா வழங்கும் போது குறிப்பிட்ட சதுர அடிக்கு மட்டும் இலவச பட்டா அரசு வழங்கும்.

Tap to resize

Latest Videos

நகைகளை விற்க போறீங்களா.. இனிமேல் ஒரு ரூபாய் கூட வரி செலுத்த தேவையில்லை.. நோட் பண்ணிக்கோங்க..

அதை தாண்டி அதிகமாக இருப்பதற்கு வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் அரசு விலை நிர்ணயித்து தொகை வசூலிக்கும். நந்தவனம், அனாதீனம், தண்ணீர் பந்தல், மண்டபம், மானாவாரி தரிசு, சர்வே செய்யப்படாத இடங்கள், சாவடி, நத்தம், கலவை, தோப்பு, கல்லாங்குத்து, காடு/பாறை, மலை, கல்லாங்குத்து, மைதானம், திடல், வெட்டுகுழி. தீர்வை விதிக்க பட்ட மானாவாரி தரிசு, போன்ற ஆட்சேபனை அற்ற அரசு நிலங்களில் குடியிருப்போர் பட்டா வாங்க முடியும். தெரு, மயானம்/ சுடுகாடு, கோவில், சாலை, மற்றும் நீர்வழிப்பாதை நிலங்களில் எந்தகாலத்திலும் பட்டா வாங்கவே முடியாது.

ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..

அதுமட்டுமின்றி அரசு நிலங்களில் எந்த வகையாக இருந்தாலும், அதனை வாங்கவே கூடாது. பட்டா இல்லாத எந்த நிலத்தையும் வாங்குவதை தவிர்ப்பதே நல்லது என்கிறார்கள். பட்டா இல்லாத வீடு வைத்திருப்பவர்கள் இனிமேல் நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பம் செய்து பட்டா பெற்றுக் கொள்ளலாம். அதன்படி தமிழக அரசின் தமிழ் நிலம் என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாகவோ பட்டா கேட்டு விண்ணப்பிக்கலாம். பட்டா மட்டுமின்றி மேலும் பல்வேறு சேவைகளை பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமியைத் தாக்கும் சூரியப் புயல்.. இணையம், மொபைல் நெட்வொர்க் பாதிக்கும்.. எலான் மஸ்க் கொடுத்த அலெர்ட்..

click me!