ஜிஎஸ்டி வெகுமதி திட்டம் விரைவில் தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஜிஎஸ்டி வெகுமதி திட்டமாக அறியப்படும், ‘மேரா பில் மேரா அதிகார்’ (Mera Bill Mera Adhikar) திட்டத்தை மத்திய அரசு விரைவில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திட்டத்தின்படி, தனிநபர்கள் தங்கள் ஜிஎஸ்டி இன்வாய்ஸ்களை பதிவேற்றுவதற்காக அவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.
இந்த திட்டம் குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் இருவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த தகவலின்படி, புதிய திட்டத்தில் சில்லறை விற்பனையாளர்கள் அல்லது மொத்த விற்பனையாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஜிஎஸ்டி இன்வாய்ஸ்களை செல்போன் மூலம் அப்லோடு செய்யும் நபர்களுக்கு மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
undefined
இதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள செல்போன் ஆஃப், ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கிடைக்கும். அந்த செயலியில், விற்பனையாளரின் சரக்கு மற்றும் சேவை வரி அடையாள எண் (GSTIN), விலைப்பட்டியல் எண், செலுத்திய தொகை மற்றும் வரித் தொகையுடன் விலைப்பட்டியலை பயனர்கள் பதிவேற்ற வேண்டும். ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 25 இன்வாய்ஸ்களை அந்த செயலி மூலம் பதிவேற்ற முடியும். குறைந்தபட்ச கொள்முதல் தொகை ரூ.200ஆக இருக்க வேண்டும் என அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இறுதிக்கட்டத்தில் உள்ள இத்திட்டத்தில், லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுத் தொகை நுகர்வோருக்கு வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் 500க்கும் மேற்பட்டவர்கள் குலுக்கல் முறை தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இந்த அதிர்ஷ்ட குலுக்கல்கள் கணினி மூலம் நடத்தப்படும். ரூ.1 கோடி மதிப்புள்ள பரிசுத் தொகைக்கு காலாண்டுக்கு இரண்டு அதிர்ஷ்ட குலுக்கள்கள் நடத்தப்படும். இத்திட்டம் கூடிய விரைவில், இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கூட தொடங்கப்படும் வாய்ப்புள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒரு நாளைக்கு ரூ. 87 ரூபாய் மட்டும் தாங்க.. ரூ.11 லட்சம் கிடைக்கும் திட்டம் - முழு விபரம் இதோ !!
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பைத் தடுக்கும் முயற்சியாக, ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் உள்ள பி2பி பரிவர்த்தனைகளுக்கு எலக்ட்ரானிக் இன்வாய்ஸ்களை அரசாங்கம் ஏற்கனவே கட்டாயமாக்கியுள்ளது. புதிய திட்டம் B2C அளவில் மின்னணு விலைப்பட்டியல் உருவாக்கத்தை ஊக்குவிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், பொருட்களை வாங்குபவர்கள் அதிர்ஷ்டக் குலுக்கலில் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், B2C (வணிகத்திலிருந்து நுகர்வோர் வரை) வணிகத்தில், பொருட்கள் அல்லது சேவைகளை வாங்கும் போது விற்பனையாளர்களிடமிருந்து முறையான விலைப்பட்டியல் கோரும் வாடிக்கையாளர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் உள்ள வணிகங்கள் மற்றும் நுகர்வோர் மத்தியில் B2C அளவில் வரி இணக்கத்தை ஊக்குவிக்கும் என அரசாங்கம் நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மொபைல் அப்ளிகேஷனில் இன்வாய்ஸ்களை பதிவு செய்து பதிவேற்றம் செய்ய நுகர்வோரை அனுமதிக்கும் இந்த தொழில்நுட்பமானது, ஜிஎஸ்டி அமைப்புக்கு தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஜிஎஸ்டி நெட்வொர்க் (GSTN) மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. வரி இணக்கத்துடன் கூடுதலாக, வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.