சிறு வணிகர்கள் தங்களின் உடனடி வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடன் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது
சிறு வணிகர், நிறுவனங்களின் அன்றாட வணிகத் தேவைகளுக்கு சிறிய தொகைகள் தேவைப்படலாம். இதற்காக வங்கிகளுக்கு சென்று அந்த கடன்களை வாங்க முடியாது. எனவே, அவர்களது உடனடி வணிகத் தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு, அவர்களுக்கான கடன் வசதியை கூகுள் இந்தியா அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) கட்டணம் செலுத்தும் முறை மிகவும் பிரபலமானது. எனவே, கூகுள் நிறுவனத்தின் யுபிஐ-யான ஜிபே மூலமாகவே இந்த கடன் வசதியை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற இந்தியாவுக்கான கூகுளின் வருடாந்திர கூட்டத்தின்போது, இந்தியாவில் உள்ள வணிகர்கள் மற்றும் நுகர்வோருக்கு சாச்செட் கடன்களை (sachet loans) வழங்குவதாக கூகுள் கூறியது, இதனை Gpay பயன்பாட்டில் பெறலாம். கடன் சேவைகளை வழங்க DMI ஃபைனான்ஸ் உடன் கூகுள் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.
சாச்செட் கடன்கள் என்பது, பொதுவாக ரூ.10,000 முதல் ரூ. 1 லட்சம் வரையிலான சிறிய கடன்களை பெற்றுக் கொள்ளவது ஆகும். அதனை 7 நாட்கள் முதல் 12 மாதங்கள் வரை திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் கொண்டது.
கடந்த ஆண்டு, வணிகர்களிடமிருந்து புதிய கடன் வாய்ப்புகளை வழங்குவதற்காக சிறு வணிகங்களை மையமாகக் கொண்ட கடன் வழங்கும் தளமான Indifi உடன் கூகுள் ஒரு கூட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
வாரம் தோறும் ஒரு புதிய விமானத்தில் பயணிக்கலாம்! ஏர் இந்தியா நிறுவனம் அதிரடி அறிவிப்பு
அதன் தொடர்ச்சியாக, வணிகர்கள் தங்கள் வர்த்தகத்திற்கு தேவையான செயல்பாட்டு மூலதன தேவைகளைத் தீர்க்க உதவும் ePayLater உடன் இணைந்து வணிகர்களுக்கான கடனை Google Pay வாயிலாக கூகுள் செயல்படுத்த உள்ளது. அதன்படி, கூகுள் பே சாச்செட் கடன்கள் மூலம் குறைந்த அளவில் ரூ.15,000 முதல் கடன் பெற்றுக் கொள்ளலாம். இந்த தொகையை மாத இஎம்ஐயாக வெறு ரூ.111 செலுத்தி அடைக்கலாம். இத்தகைய கடன் சேவைகளை வழங்க DMI ஃபைனான்ஸ் உடன் கூகுள் நிறுவனம் கூட்டு சேர்ந்துள்ளது.
நுகர்வோர் தரப்பில், ஆக்சிஸ் வங்கியுடன் இணைந்து தனிநபர் கடன்களை விரிவுபடுத்தும் கூகுள், ஐசிஐசிஐ உடன் இணைந்து, கூகுள் தனது யுபிஐ கடன் வழங்கும் சேவையையும் தொடங்கியுள்ளது.