
தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்ந்துள்ளது, நகைப்பிரியர்கள் மற்றும் இல்லத்தரசிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது. உலகில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாகத் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இதையடுத்து, கடந்த ஏப்ரல் மாதம் தங்கம் விலை உச்சம் தொட்டது. ஆனால், மே மாதத்தில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்தைக் கண்டது.இந்த நிலையில், ஜூன் மாதம் தொடங்கியதிலிருந்தே தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை, பிறகு 4 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வந்தது. எனினும், கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை அதிகரித்து வந்த வண்ணம் இருந்தது. அதன்படி, நேற்று (12.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,100-க்கும், சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.72,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையும் சந்தையின் போக்கும்
சர்வதே பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதை தவிர்த்து உலோகங்களில் முதலீடு செய்வது அதகரித்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை அதிகரித்துள்ளது. ஆனி மாதம் பிறக்கவுள்ளதால் இந்தியாவில் சுபநிகழ்ச்சிகள் அதிகரித்து தங்கத்தின் தேவை உயரும் என்பதால் வரும் நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை மேலும் உச்சம் அடைய வாய்ப்புள்ளதாக வியாபிகள் தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை புதிய உச்சம்
இந்நிலையில், இன்று தங்கம் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இன்று (13.06.2025) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.195 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,295-க்கும், சவரனுக்கு ரூ.1,560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.74,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல, 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.170 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7,650-க்கும், சவரனுக்கு ரூ.1,360 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.61,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களாக மாற்றம் ஏதும் இல்லாமல் இருந்த வெள்ளி விலை, இன்று உயர்ந்தது. அதன்படி, வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை
13.06.025 - ஒரு சவரன் ரூ.74,360
12.06.2025 - ஒரு சவரன் ரூ.72,800
11.06.2025 - ஒரு சவரன் ரூ.72,160
10.06.2025 - ஒரு சவரன் ரூ.71,560
09.06.2025- ஒரு சவரன் ரூ.71,640
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.