தங்கம் அதிரடி விலை உயர்வு..! 28 ஆயிரத்தை நெருங்கும் பேரதிர்ச்சி...!

Published : Aug 05, 2019, 11:58 AM IST
தங்கம் அதிரடி விலை உயர்வு..!  28 ஆயிரத்தை நெருங்கும் பேரதிர்ச்சி...!

சுருக்கம்

தங்கத்தின் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வரும் இந்த தருணத்தில் ஒரு சவரன் தங்க விலை 27 ஆயிரத்தை கடந்து உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.   

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. இந்த நிலையில் இன்று ஓரே நாளில் கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்தும், சவரனுக்கு 352 ரூபாய் அதிகரித்து உள்ளது .

காலை நேர நிலவரப்படி,  

22 கேரட் ஆபரண தங்கம் : கிராம் ரூ. 3460.00 (44 ரூபாய் அதிகரிப்பு). சவரனுக்கு 352 ரூபாய்  அதிகரித்து 27 ஆயிரத்து 680 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

இதே போன்று வெள்ளி விலையும் அதிகரித்து உள்ளது. அதன் படி, கிராமுக்கு 45.80 (1.30 ரூபாய் அதிகரிப்பு)

ஏற்கனவே தங்கம் விலை தொடர் ஏறுமுகத்தில் இருந்து வந்ததால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இந்த நிலையில், சவரன் விலை மிக விரைவில் 28 ஆயிரத்தையும் நெருங்க வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ITR தாக்கல் செய்தீர்களா? டிசம்பர் 31க்குள் இதை செய்யாவிட்டால் அவ்ளோதான்.!
Gold Rate Today (December 20): தங்கம் வாங்க போறீங்களா? இதை தெரிஞ்சுக்கோங்க.!