
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை குறைந்திருப்பது பொதுமக்கள், குறிப்பாகத் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் அடித்தட்டு மக்களுக்கு மிகுந்த நிம்மதியை அளித்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சவரனுக்கு 74,000 ரூபாயை தாண்டி இருந்த தங்கத்தின் விலை மீண்டும் குறைந்தது மக்கள் மத்தியில் ஒரு பண்டிகை உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
தங்க விலை நிலவரம்
இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9150 ஆகவும், சவரனுக்கு ரூ.73,200 ஆகவும் உள்ளது. இது நேற்று விட சவரனுக்கு ரூ.80 குறைவாகும். குறைந்த விலை காணப்பட்டதைத் தொடர்ந்து, நகைக்கடைகளில் மக்கள் திரண்டுள்ளனர். குறிப்பாக, திருமண ஏற்பாடுகள் செய்து வைத்திருப்போர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி நகை வாங்கி விடும் எண்ணத்தில் உள்ளனர்.
வெள்ளி விலை மாற்றமில்லை:
இதே நேரத்தில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராமுக்கு ரூ.126 என நிலைபெற்றுள்ளது. 1 கிலோ பார் வெள்ளி ஒரு லட்சத்து 26 ஆயிரம் ரூபாயாக உள்ளது.
ஏன் குறைந்தது தங்கம் விலை?
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பங்குசந்தையில் முதலீடுகள் அதிகரித்ததன் விளைவாக தங்கத்தின் மீது இருக்கும் ஆதரவு குறைந்து, விலை குறைவுக்கு வந்து விட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தற்பொழுது நிலையாக இருப்பதும், தங்கத்தின் விலை குறைவில் பங்களிக்கிறது. மேலும், சர்வதேச முதலீட்டாளர்கள் தற்போது பங்குசந்தை, டிஜிட்டல் கறன்சி போன்ற விரைவு வருமான வாய்ப்புகளை நோக்கி நகர்வதும், தங்கத்தின் மேல் உள்ள கவனத்தை குறைத்துவிட்டது. இதனால் தங்கத்தில் விலை சரிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னேற்பாடுகள் தொடங்கிய மக்கள்
திருமணத்தில் நகை வாங்க வேண்டியவர்கள் இதை ஒரு சந்தர்ப்பமாகக் கருதி நகைக்கடைகள் நோக்கி திரண்டுள்ளனர். சுமாராக 3 மாதங்களுக்குப் பிறகு இவ்வளவு அளவில் விலை குறைந்துள்ளதால், மக்கள் 'இப்போதே வாங்கிக்கலாம்' என்ற மனநிலையுடன் இருக்கின்றனர்.
வரும் வாரத்தில் எப்படி இருக்கம்.?!
சந்தை நிபுணர்கள் கணிப்பின்படி, வரும் வாரங்களில் தங்கத்தின் விலை மேலும் குறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால், தற்போது சிலர் இன்னும் காத்திருக்கலாம் என்ற எண்ணத்துடன் இருக்கிறார்கள். ஆனால் திடீரென திரும்பவும் விலை உயரும் என்ற அச்சத்தாலும், சிலர் உடனடியாக முதலீடு செய்கிறார்கள். தங்கத்தின் விலை குறைவது நிச்சயமாக ஒரு நல்ல செய்தி. இது திருமண ஏற்பாடுகள் செய்திருப்போர் மட்டுமல்ல, சிறு முதலீட்டாளர்களுக்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. இருப்பினும், சந்தையின் இயல்பான ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு,நிபுணர் ஆலோசனையுடன் முதலீடு செய்வது பாதுகாப்பான வழி என்பதை மறந்துவிடக்கூடாது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.