ஜீரோ சம்பளத்தில் வேலை பார்க்கும் அம்பானியின் வாரிசுகள்! அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?

Published : Jul 28, 2024, 05:04 PM ISTUpdated : Jul 28, 2024, 05:06 PM IST
ஜீரோ சம்பளத்தில் வேலை பார்க்கும் அம்பானியின் வாரிசுகள்! அப்படி என்ன செய்றாங்க தெரியுமா?

சுருக்கம்

2020ஆம் ஆண்டு முதல் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் இருந்து தனக்குக் கிடைக்கும் சம்பளத்தை 15 கோடியில் கட்டுப்படுத்தியது போல அவர்களின் வாரிசுகளும் சம்பளத்துக்குப் பதில் கமிஷன் மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள்.

கோடீஸ்வரரான முகேஷ் அம்பானியின் வாரிசுகள் ஒவ்வொருவரும் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த நிறுவனங்கள் ஒன்றின் இயக்குநர்களாக உள்ளனர். அவர்களின் சம்பளம் எவ்வளவு என்ற தகவல் கசிந்துள்ளது.

இந்தியப் பணக்காரர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி, உலக கோடீஸ்வரர்களில் பட்டியலிலும் ஒன்பதாவதாக இருக்கிறார். முகேஷ் அம்பான தனக்குப் பிறகும் தனது தொழில் சாம்ராஜ்யம் வெற்றிகரமாகத் தொடர தன் மகள் மற்றும் மகன்களை ரிலையன்ஸ் குழும நிறுவனங்களில் முக்கியப் பதவிகளில் வைத்திருக்கிறார்.

ரிலையன்ஸ் குழு நிறுவனங்களின் நிர்வாகக் குழுக்களில் அம்பானியின் வாரிசுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பொதுவாக இதுபோன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும் குழுவில் இருப்பவர்களுக்கு பெரிய தொகை சம்பளமாக வழங்கப்படும். ஆனால், அம்பானியின் வாரிசுகளின் சம்பளம் எவ்வளவு என்று கேட்டால் ஆச்சரியமாக இருக்கும்.

கூகுள் மேப்பில் 6 புதிய வசதிகள் அறிமுகம்! பயணப் பிரியர்களின் பிரச்சினைக்குத் தீர்வு வந்தாச்சு!

அம்பானி பிள்ளைகளின் சம்பளம் எவ்வளவு?

அம்பானியின் மகள் இஷா, மகன்கள் ஆகாஷ், ஆனந்த், மூவருமே சம்பளம் இல்லாமலே பணிபுரிந்து வருகிறார்கள். சம்பளத்துக்குப் பதிலாக பலவிதமான சலுகைகள் வழங்கப்படுகின்றன. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி 2014ஆம் ஆண்டில் நிர்வாகக் குழு உறுப்பினராக இணைந்தார். அவருக்குக் கிடைக்கும் மரியாதை இஷா, ஆகாஷ் மற்றும் ஆனந்த் ஆகிய மூவருக்குமே இருக்கிறதாம்.

சம்பளம் வாங்காவிட்டாலும், நிர்வாகக் குழுவின் ஒவ்வொரு கூட்டத்திலும் பங்கேற்க இவர்களுக்கு தலா ரூ.6 லட்சம் கொடுக்கப்படுகிறதாம். கம்பெனியின் லாபத்தைப் பொறுத்து ஆண்டுக்கு ரூ.2 கோடி கமிஷனும் வழங்கப்படுகிறதாம். பிள்ளைகள் மூன்று பேரும் வந்துவிட்டதால், நீதா அம்பானி நிர்வாகக் வேலையில் இருந்து விலகியிருக்கிறார் எனக் கூறப்படுகிறது. ஆனால், முக்கிய நிர்வாக கூட்டங்களில் மட்டும் நீதா அம்பானியும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.

2020ஆம் ஆண்டு முதல் முகேஷ் அம்பானி தனது நிறுவனத்தில் இருந்து தனக்குக் கிடைக்கும் சம்பளத்தை 15 கோடியில் கட்டுப்படுத்தியது போல அவர்களின் வாரிசுகளும் சம்பளத்துக்குப் பதில் கமிஷன் மட்டும் பெற்றுக்கொள்கிறார்கள்.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

தங்க கடனில் புதிய விதிகள்.. ஆர்பிஐயின் அதிரடி மாற்றம்.. மக்களே நோட் பண்ணுங்க
அரசு ஊழியர்கள் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு.. 1 கோடி குடும்பங்கள் நிம்மதி.!