Russia Ukraine war: ரஷ்யா-உக்ரைன் போர்: பிஸ்கட் முதல் எரிபொருள்வரை அனைத்தும் விலை உயர்கிறது

By Pothy RajFirst Published Mar 14, 2022, 11:27 AM IST
Highlights

Russia Ukraine war:கொரோனா பாதிப்பிலிருந்து உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்நிலையில்,  சர்ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் காரணமாக பொருளாதார வளர்ச்சி மீண்டும் சுணக்கமடைந்துள்ளது.

கொரோனா பாதிப்பிலிருந்து உலகப் பொருளாதாரம் மீண்டு வரும்நிலையில்,  சர்ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் காரணமாக பொருளாதார வளர்ச்சி மீண்டும் சுணக்கமடைந்துள்ளது.

நிக்கல் விலை

கடந்த வாரம் லண்டன் மெட்டல் எக்சேஞ்ச் சந்தையில் நிக்கல் விலை இரு மடங்காக அதிகரித்து,ஒரு டன் ஒரு லட்சம் டாலராக அதிகரித்தது. இதனால் நிக்கல் வர்த்தகம் நிறுத்தப்பட்டது, ரத்து செய்யப்பட்டது. உலகளவில் நிக்கல் சப்ளையில் 6% ரஷ்யா வைத்துள்ளது, அலுமினியத்தில் 6%, கோதுமை ஏற்றுமதியில் 18% ரஷ்யா வைத்திருக்கிறது. 

பொருளாதாரத் தடை

உக்ரைன் ரஷ்யா இடையிலான போர், ரஷ்யா மீதான பொருளாதாரத் தடையால் இந்தப் பொருட்களின் விலை கடுமையாக விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அலுமினியம், காப்பர், ஜின்க், காரியம், கச்சா எண்ணெய், கோதுமை, இயற்கை எரிவாயு, நிலக்கரி, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பொருட்களின் சப்ளை சீராக இல்லாததால், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலையில் விற்கப்படுகிறது.

வீட்டு உபயோகப் பொருட்கள்

வீட்டுப்பயன்பாட்டுக்கு தேவைப்படும் உலோகம், பிளாஸ்டிக் பொருட்கள், நுகர்வோர்பொருட்களுக்கான உள்ளீட்டுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால், ஏற்கென விலை கடுமையாக அதிகரித்திருந்தது. ரஷ்யா உக்ரைன் போரால் ஏற்பட்ட சப்ளை தட்டுப்பாட்டால், வரும் நாட்களில் இன்னும் விலை எகிறக்கூடும்.

காற்றாடி, சமையலுக்கு தேவையான பாத்திரங்கள், தையல் எந்திரங்கள், வாட்டர் ஹீட்டர் ஆகியவற்றை தயாரிக்கும் உஷா இன்டர்நேஷனல் நிறுவனம்  வரும் ஏப்ரல் மாதத்திலிருந்து தனது பொருட்களுக்கான விலை 10 முதல் 15 சதவீதம் விலையை உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது.

நுகர்வோர் பொருட்கள்

வேகமாக நகரும் நுகர்வோர் பொருட்களான எப்எம்சிஜி பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கான உள்ளீட்டுச் செலவு, உற்பத்திச்செலவு இருமடங்காக அதிகரித்துள்ளது. இதனால் வரும்நாட்களில் அந்தப் பொருட்களின் விலையும் உயரக்கூடும்.

இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம் 100கிராம் லக்ஸ் சோப்பின் விலை 13சதவீதம் விலை உயர்த்தியுள்ளது. இதுபோன்று பல்வேறு பொருட்களின் விலையையும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சோப் உற்பத்திக்கு தேவைப்படும் கச்சாஎண்ணெய் மூலப்பொருட்கள், காய்கறி எண்ணெய் மூலப்பொருட்கள், விலை உயர்ந்துவிட்டால்சோப் விலை உயர்ந்துவிட்டது. வரும் நாட்களில் வாசனைப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்களின் விலையும் உயரலாம் 

விலை குறையவாய்ப்பில்லை

டாபர் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ மோகித் மல்ஹோத்ரா கூறுகையில் “ தொடரந்துஅதிகரி்த்து வரும் பணவீக்கத்தால், பொருட்களின் பேக்கிங் செலவு, தேன், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது. இதனால் வரும் நாட்களில் இதன் விலை 5%வரை உயரலாம். பெரும்பாலான பொருட்கள் சீராக சப்ளை செய்யப்படுவதில்லை என்பதால்தான்இந்தவிலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது. இப்போதைக்கு பொருட்களின் விலை தணிவதற்கு வாய்ப்பில்லை” எனத் தெரிவித்தார்

click me!