
சந்தையில் பங்குகள் ஏற்றத் தாழ்வுகளோடு இயங்கிக்கொண்டே இருக்கும். ஆனால், சில பங்குகள் முதலீட்டாளர்களுக்கு அபார லாபத்தைத் தந்திருக்கின்றன. அப்படிப் பட்ட ஓர் உதாரணம், ஒரு பங்கு ரூ.15-இல் இருந்து வெறும் 5 ஆண்டுகளில், முதலீட்டாளர்களின் 1 லட்சம் ரூபாயை 12 கோடிக்கும் மேல் உயர்த்தியுள்ளது.
சிறிய முதலீட்டில் பெரிய வெற்றி
2020 ஏப்ரல் மாதத்தில் ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா (Hitachi Energy India) பங்குகள் வெறும் ரூ.15-க்கு கிடைத்தன. அப்போது 1 லட்சம் முதலீடு செய்திருந்தால், இன்று அந்த தொகை 12.60 கோடிக்கும் அதிகமாக உயர்ந்திருக்கும். அதாவது, 5 ஆண்டுகளில் 12,500 மடங்கு வருமானம் கிடைத்துள்ளது. சந்தையில் இப்படிப் பட்ட அபார ரிட்டர்ன்ஸ் தரும் பங்குகள் மிக குறைவு.
பங்கு விலை உயர்வு
தற்போது பாம்பே பங்கு சந்தையில் (BSE) Hitachi Energy India பங்குகள் ரூ.19,877-க்கு அருகில் வர்த்தகம் செய்கின்றன. கடந்த 1 ஆண்டு மட்டும் 64% வரை உயர்வைக் கண்டுள்ளன. 2025 தொடக்கம் முதல் 25% அதிகரித்து வருகிறது. இது முதலீட்டாளர்களுக்கு நிலையான லாபத்தைத் தரும் பங்காகத் திகழ்கிறது.
காலாண்டு முடிவு
2025 ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிந்த முதல் காலாண்டு முடிவு சமீபத்தில் வெளியானது. அந்த காலாண்டில் நிகர லாபம் 131.6 கோடியாக உயர்ந்துள்ளது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் இருந்த 10.42 கோடியை விட 12 மடங்கு அதிகம்.
வருவாய் மற்றும் செயல்திறன்
நிறுவனத்தின் மொத்த வருவாய் 11.4% அதிகரித்து ரூ.1,479 கோடியாக உயர்ந்துள்ளது. EBITDA 224% உயர்ந்து ரூ.155 கோடியாகியுள்ளது. இதனால் நிறுவனம் மட்டுமின்றி, பங்குதாரர்களின் லாப விகிதமும் பெரிதும் அதிகரித்துள்ளது. 5 ஆண்டுகளில் சாதாரண பங்காக இருந்த Hitachi Energy India, இன்று முதலீட்டாளர்களுக்கு “கனவு வருமானம்” கொடுத்த பங்காக மாறியுள்ளது.
குறிப்பு : நீங்கள் எந்தவொரு நிதி சார்ந்த முடிவை எடுப்பதற்கு முன்பு நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.