forex reserve: gold reserve: நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மோசமாகக் குறைந்து: தங்கம் ரிசர்வ் அதிகரிப்பு

By Pothy RajFirst Published May 14, 2022, 10:13 AM IST
Highlights

forex reserve of india : gold reserve:இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஓர்ஆண்டில் இல்லாத அளவு மே6ம் தேதி முடிந்த வாரத்தில் 177 கோடி டாலர் குறைந்து, 5959.54 கோடி டாலராகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த ஓர்ஆண்டில் இல்லாத அளவு மே6ம் தேதி முடிந்த வாரத்தில் 177 கோடி டாலர் குறைந்து, 5959.54 கோடி டாலராகக் குறைந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால்தான் டாலர் கையிருப்பு குறைந்து வருகிறது. டாலரின் மதிப்பு வலுப்பெறுவதால், இந்தியச் சந்தையிலிருந்து முதலீட்டாளர்கள் முதலீட்டை திரும்பப் பெறும்போது டாலரின் தேவை அதிகரிக்கும். அப்போது டாலர் அதிகளவில் நாட்டை விட்டு வெளியேறும்போது, ரூபாய் மதிப்பு நெருக்கடிக்கு உள்ளாகி மதிப்பை இழக்கிறது.

முந்தைய வாரத்திலும் அந்நியச் செலாவணி கையிருப்பு 269.50 கோடி குறைந்து, 5977.28 கோடியாகக் சரிந்து, 6ஆயிரம் கோடிக்கும் கீழ் செலாவணி சரிந்தது. 2021 அக்டோபர் மாதத்திலிருந்து 2022 மார்ச் மாதம் வரை நாட்டிலிருந்து 2800 கோடி டாலர் குறைந்துள்ளது. 

எப்சிஏ எனச் சொல்லப்படும் அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் 196.80 கோடி டாலர் குறைந்து, 5308.55 கோடி டாலராகக் குறைந்துளளது.

ஆனால் ரிசர்வ் வங்கியிடம் தங்கம் கையிருப்பு கடந்த 2 ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது ஆறுதலானதாகும். ஒரு நாட்டிடம் தங்கம் கையிருப்பு இருப்பதை வைத்தே நாட்டின் பொருளாதாரம் தீர்மானிக்கப்படும். அந்த வகையில், இந்தியாவிடம் கடந்த 2 ஆண்டுகளாக 100 டன்(ஒரு லட்சம் கிலோ) தங்கத்துக்கு மேல் இருப்பு இருந்து வருகிறது.  

2022 மார்ச் மாதம் முடிவில் ரிசர்வ் வங்கியிடம் 760.42 டன் தங்கம் இருக்கிறது. இதில் 11.08 டன் டெபாசிட்டாக இருக்கிறது. பேங்க் ஆஃப் இங்கிலாந்து, பேங்க் ஆஃப் இன்டர்நேஷனல் செட்டில்மென்டில் 453.52 டன் தங்கமும், உள்நாட்டில் ரூ.295.82 டன் தங்கமும் கையிருப்பு இருக்கிறது.

click me!