இன்று தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்..! தமிழகத்திற்கு கூடுதல் அறிவிப்புகள்..?

Published : Feb 01, 2026, 07:25 AM IST
Nirmala Sitharaman

சுருக்கம்

2026 – 27ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்யவுள்ள நிலையில், இன்றைய அறிவிப்புகளில் தமிழகத்திற்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 – 27ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்ய உள்ளார். 2016ம் ஆண்டு முதல் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக ஞாயிற்றுக் கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படாது. ஆனால் இன்றைய தினம் வரலாற்றில் முதல் முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது.

2016ம் ஆண்டு வரை ரயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யும் வழக்கம் இருந்தது. அப்போது புதிய ரயில் தடங்கள், புதிய ரயில் சேவை உள்ளிட்ட காரணங்களால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் 2016ம் ஆண்டுக்கு பின்னர் இது மாற்றப்பட்டு பொது பட்ஜெட்டோடு இணைக்கப்பட்டது.

அதன்படி காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் இந்த பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஹோலிக்கு முன் 60% சம்பள உயர்வா.? அரசு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் ஜாக்பாட்.. டிஏ வேற இருக்கு
இனி "No Balance" பயம் வேண்டாம்! ₹10,000 வரை ஓவர்டிராப்ட் வசதி பெறுவது எப்படி?