EPFO: கடந்த 40ஆண்டுகளில் இல்லாத வகையில் பிஎப் வட்டி வீதம் குறைப்பு

By Pothy RajFirst Published Mar 12, 2022, 12:43 PM IST
Highlights

EPFO:மாத ஊதியம் பெறுவோருக்கு அதிகமான பலன் அளிக்கும் இபிஎப்ஓ மீதான வட்டி வீதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

மாத ஊதியம் பெறுவோருக்கு அதிகமான பலன் அளிக்கும் இபிஎப்ஓ மீதான வட்டி வீதம் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைக்கப்பட்டுள்ளது. 

வட்டி வீதம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் குறைக்கப்பட்டுள்ளது கோடிக்கணக்கான மாத ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

பணியாளர் வருங்கால வைப்பு நிதியின் அறங்காவலர்கள் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் நடப்பு நிதியாண்டுக்கான வட்டிவீதத்தை முடிவு செய்ய ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், “ கடந்த ஆண்டில் நிலவி வந்த பிஎப் வட்டியான 8.50 சதவீதத்திலிருந்து 8.10 % சதவீதமாக வட்டி குறைக்கப்பட்டு” முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் பிஎப் திட்டத்துக்கு வழங்கப்படும் மிகக்குறைந்த அளவு வட்டி என்று தகவல்கல் தெரிவிக்கின்றனகொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த டிசம்பர் 31ம் தேதிவரை, 56.79 லட்சம் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.14 ஆயிரத்து 310 கோடி வழங்கப்பட்டுள்ளது

கடைசியாக கடந்த 1977-78ம் ஆண்டு பிஎப்க்கு 8 சதவீதம் வட்டி வழங்கப்பட்டதுதான் மிகக்குறைந்தபட்சமாகும். அதன்பின் 42 ஆண்டுகளிலேயே மிகக்குறைவான வட்டி இப்போதுதான் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2018-19ம் ஆண்டு 8.65% வழங்கப்பட்டது, 2019-20ம் ஆண்டு 8.50%சதவீதமாக வட்டிக் குறைக்கப்பட்டது. 2016-17ம் ஆண்டு பிஎப் வட்டி8.65%, 2017-18ம் ஆண்டு 8.55 சதவீதமாக இருந்தது. அதிகபட்சமாக 2015-16ம் ஆண்டு பிஎப் வட்டி 8.80 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. 

2013-14, 2014-15ம் ஆண்டு 8.75%, 2012-2013ம் ஆண்டு 8.50 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. 2011-12ம் ஆண்டு 8.25%வட்டி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

click me!