elon musk: ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அடுத்ததாக கோகோ-கோலா நிறுவனத்தை வாங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு வாங்கிய டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் அடுத்ததாக கோகோ-கோலா நிறுவனத்தை வாங்கப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் புதிய உரிமையாளரான எலான் மஸ்க் பதிவிட்ட கருத்தில் “ அடுத்ததாக கோகோ கோலாவை வாங்க இருக்கிறேன், அதில் மீண்டும் கோகைனை சேர்க்க இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
undefined
அதுமட்டுமல்லாமல் எலான் மஸ்க் தான் முன்பு பதிவிட்ட ட்விட்டரின் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டையும் பதிவிட்டுள்ளார். அதில் “ இப்போது நான் மெக்டொனால்டை வாங்கப் போகிறேன். அனைத்து ஐஸ்க்ரீம் எந்திரங்களையும் பொருத்தப்போகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அதற்கு அவரே பதில் அளித்து “ என்னால் வியப்புக்குரிய விஷங்களை எல்லாம் செய்ய முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தை முழுமையாக எலான் மஸ்க் வாங்கும் முன் ட்விட்டர் நிறுவனத்தில் 9 சதவீதத்துக்கும் அதிகமான பங்குகளை மட்டுமேவாங்கியிருந்தார். ட்விட்டரில் எட்டி பட்டனை சேர்க்க வேண்டும், அதில் பல்வேறு அம்சங்களை சேர்த்து அதை மேம்படுத்த வேண்டும் என்று ஆலோசனை தெரிவித்திருந்தார்.
ட்விட்டர் நிறுவனத்தில் அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும்தனிநபர் என்பதால், அவரை நிர்வாகக் குழுவில் சேர்க்க முயன்றபோது அதில் சேர்வதற்கு எலான் மஸ்க் மறுத்துவிட்டார்.
இந்நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்கியுள்ள எலான் மஸ்க் அடுத்ததாக கோ-கோலா நிறுவனத்தை வாங்கவும் திட்டமிட்டு அதை மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.
கோகோ கோலா குளிர்பானத்தில் இரு முக்கியப் பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. ஒன்று கோகோ இலைகள் மற்றொன்று கோலா நட்ஸ். கோலா நட்ஸ் என்பது காஃபைன் மூலப்பொருளாகும். கோகா இலைகளில் இருந்துதான் கோகைன் மருந்து எடுக்கப்படுகிறது.
19-வது நூற்றாண்டில் கோகோ-கோலா குளிர்பானத்தின் முக்கிய மூலப் பொருளாக இருப்பது கோகோ இலைகள்தான். அப்போகு கோகைன் என்பது மருந்தாகப் பார்க்கப்பட்டது. ஆனால், அதன்பின் கோகைன் என்பது போதைப் பொருள் பட்டியலில் அமெரிக்கா சேர்த்து அதற்கு தடை விதித்தது. இதையடுத்து, கோகோ கோலாவிலிருந்து கோகைன் நீக்கப்பட்டது, அதற்குப் பதிலாக கோகைன் நீக்கப்பட்ட கோகோ இலைகள் சேர்க்கப்படுகின்றன