
நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் நாளுக்கு நாள் புதிய புதிய சலுகைகளை டிமார்ட் அறிவித்து வருகிறது. பட்ஜெட் போட்டு குடும்பம் நடுத்துபவர்களுக்கு டிமார்ட் ஷாப்பிங் நிறுவனம் ஏராளமான தள்ளுபடி சலுகைகளை வழங்கி வருகிறது. இது ஒரு புறம் இருந்தாலும், முதல் முறையாக டிமார்ட் நிறுவனம் கடந்த 2002 ஆம் ஆண்டு மும்பையில் தான் முதல் கடையை தொடங்கியிருக்கிறது.
அதன் பிறகு சலுகைகள், தள்ளுபடி என்று நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களுக்கு ஆஃபர் கொடுத்து இன்று 23 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. டிமார்ட் நிறுவனத்தில் குறைந்த விலையில் வீட்டிற்கு தேவையான வீட்டு உபயோக பொருட்கள், மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள், பொம்மைகள், ஆடைகள், காலணிகள், பாத்திரங்கள் என்று எல்லாவற்றையும் வாங்கலாம்.
இதன் மூலமாக நாளுக்கு நாள் வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து இன்று நாடு முழுவதும் 300க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தான் இப்போது புதிதாக தஞ்சாவூரிலும் டிமார்ட் நிறுவனம் தங்களது புதிய கிளையை திறக்கவுள்ளது. அதுவும் 2 கிளைகளை திறக்கிறது. ஒன்று எம்சி சாலையில் இருக்கும் பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு எதிரிலும், மற்றொன்று வல்லம் பகுதியில் இருக்கும் எம்பிசி கல்லூரிக்கு அருகிலும் என்று 2 புதிய கிளைகளை திறக்கிறது.
தஞ்சாவூரில் புதிதாக திறக்கப்படும் இந்த 2 புதிய கிளைகளும் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களை வழங்கும் சிறந்த வாய்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக மற்ற டிமார்ட் கிளை நிறுவனங்களில் எப்படி, எந்தவிதமான சலுகைகள் கொடுக்கப்படுகிறதோ அதே போன்று தான் இந்த 2 புதிய கிளை நிறுவனங்களிலும் சலுகைகளுடன் தரமான பொருட்களை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தஞ்சாவூரில் டிமார்ட் நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட இருக்கும் நிலையில் நிதி நிலை மற்றும் வணிக வளர்ச்சிக்கு டிமார்ட்டின் 2 புதிய கிளைகள் சிறந்த உத்வேகம் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.