நேரடி வரி வசூல் 17.30 சதவீதம் அதிகரிப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்!

Published : Feb 12, 2024, 01:42 PM IST
நேரடி வரி வசூல் 17.30  சதவீதம் அதிகரிப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்!

சுருக்கம்

2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் 17.30  சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது

2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரி வசூல் பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி வரை மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி 80.23 சதவீதமாக உள்ளது எனவும், வரி வருவாய் 17.30 சதவீத ஆண்டு வளர்ச்சியுடன் ரூ. 18.38 லட்சம் கோடியாக உள்ளது எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. 2024  பிப்ரவரி 10, வரையிலான நேரடி வரி வசூல், ரூ.18.38 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் மொத்த வசூலை விட 17.30  சதவீதம் அதிகமாகும். 

அதேபோல், திரும்பப் பெறப்பட்ட தொகைக்குப் பின் நிகர நேரடி வரி வருவாய் ரூ. 15.60 லட்சம் கோடியாக உள்ளது.  இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட 20.25 சதவீதம் அதிகமாகும். இது 2023-24 நிதியாண்டுக்கான நேரடி வரிகளின் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் 80.23 சதவீதம் ஆகும்.

மூடிய போஸ்ட் ஆபீஸ் கணக்கை எளிதாக மீண்டும் தொடங்கலாம்.. எளிய விதிமுறைகள் இதோ..

கார்ப்பரேட் வருமான வரி எனப்படும் சிஐடி  மற்றும் தனிநபர் வருமான வரி எனப்படும் பிஐடி  ஆகியவற்றின் மொத்த வருவாய் வசூலும் நிலையான வளர்ச்சியைக் காட்டுகிறது. சிஐடி வளர்ச்சி விகிதம் 9.16 சதவீதம் ஆகவும், பிஐடி மட்டும் 25.67 சதவீதமும், எஸ்டிடி உட்பட பிஐடி 25.93 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது. பணத்தைத் திரும்பப்பெறுதல் சரிசெய்யப்பட்ட பிறகு, சிஐடி வசூலில் நிகர வளர்ச்சி 13.57 சதவீதம் ஆகும். பிஐடி வசூலில் 26.91 சதவீதமும் எஸ்டிடி உட்பட பிஐடி 27.17 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.

2023 ஏப்ரல் 1 முதல் 2024 பிப்ரவரி 10 வரை ரூ. 2.77 லட்சம் கோடி  திரும்ப (ரீஃபண்ட்) வழங்கப்பட்டுள்ளது எனவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

வீடு, கார், தனிநபர் கடன்களில் இஎம்ஐ குறையுது.. ரிசர்வ் வங்கியின் பரிசு.. எவ்வளவு குறையும்?
கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ விகிதம் 5.25% ஆக குறைப்பு.. அதிரடி முடிவு