
டீசலை மொத்தமாகக் கொள்முதல் செய்பவர்களுக்கு பெரிய அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது. லிட்டருக்கு ரூ.25 உயர்த்தி முதல் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
வழக்கமான விலை
இதன்படி போக்குவரத்துக் கழகங்கள், பெருநிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஷாப்பிங் மால்கள், ரயில்கள், விமானநிலையங்கள் ஆகியவற்றுக்குவிற்கப்படும் டீசல் லிட்டர் ரூ.25 உயர்த்தப்படும். மற்றவகையில் சில்லரை விலையில் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் நிரப்பும் லாரிகள், கார்கள் போன்றவற்றுக்கு வழக்கமான விலையில்தான் டீசல் விற்பனை செய்யப்படும்.
போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் காரணமாக சர்வதேசசந்தையில் கச்சா எண்ணெய் கடுமையாக உயர்ந்து பேரல் 140 டாலரை எட்டியது.அதன்பின் ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட ஒபேக் நாடுகள் கச்சாஎண்ணெய் உற்பத்தியை அதிகரிப்பதாகத் தெரிவி்த்ததைத் தொடர்ந்து விலை குறையத் தொடங்கியது.
இருப்பினும் 2 வார விலை சராசரி அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் விலை நிர்ணயம் செய்வதால் மொத்தக் கொள்முதலில் டீசல் லிட்டருக்கு ரூ.25 அதிகரித்துள்ளது.
மொத்தக் கொள்முதல்
இதனால் மொத்தக் கொள்முதல் செய்யும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் கடுமையான விலை ஏற்றத்தைச் சந்திக்க வேண்டியதிருக்கும். மேலும் சில்லரை விலையில் பெட்ரோல் பங்க்குகளில் டீசலை அரசுப் பேருந்துகள் நிரப்பி வந்ததால், விற்பனை அதிகரித்தது. ஆனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு பெரும் சுமை ஏற்பட்டது. ஆதலால், வேறுவழியின்றி மொத்தக் கொள்முதல் விலையை உயர்த்தியுள்ளன.
இந்த விலை உயர்வால் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் விலை உயர்வைத் தாங்கிக்கொண்டுநடத்த வேண்டும் அல்லது டிக்கெட் விலையை உயர்த்த வேண்டும் அல்லது சில்லரை விலையில் தனியார் பெட்ரோல் பங்க்குகளில் டீசல் நிரப்ப வேண்டிய நிலையில் உள்ளன.
ரயில் கட்டணம் உயருமா
ரயில்களில் டீசல் எஞ்சின்களுக்கு இனிமேல் அதிகமான விலையில்தான் டீசல் நிரப்ப வேண்டும். இதனால் உள்ளீட்டுச் செலவு அதிகரிக்கும். இந்திய ரயில்வேயில் முற்றிலுமாக இருப்பாதைவழித்தடங்கள் மின்மயமாக்கப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில், நகரங்களுக்கு டீசல் எஞ்சின்கள்தான் இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது டீசல் விலை உயர்வால் ரயில் கட்டணம் அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது.
உள்ளீட்டுச் செலவு
தொழிற்சாலைகள் மொத்தமாக டீசல் கொள்முதல் செய்யும்போது அதிகவிலை கொடுக்க வேண்டியுள்ளன. இதனால்பொருட்களின் உள்ளீட்டுச் செலவு அதிகரித்து பொருட்களின் விலைவாசி உயரக்கூடும். மேலும், ஷாப்பிங் மால், விமானநிலையங்களில் மின்சாரம் தடைபட்டால் , ஜெனரேட்டர் பயன்பாடு அடிக்கடி இருக்கும். டீசல்விலை லிட்டருக்கு ரூ.25 அதிகரித்துள்ளதால், இனிமேல் விமான நிலையங்களுக்கான கட்டணம், ஷாப்பிங் மால்களில் கடை வைத்திருப்போருக்கான வாடகைச் செலவு அதிகரிக்கலாம்.
இழப்பு
நயாரா எனர்ஜி, ஜியோ-பிபி, ஷெல் ஆகிய தனியார் சில்லரை விற்பனையாளர்களு டீசல் விற்பனை அதிகரித்தபோதிலும்கூட கொள்முதல் அளவைக் குறைத்துக் கொள்ளவிரும்பவில்லை. ஆனால், இப்போதுள்ள சூழலில் தொடர்ந்து பழைய விலையில் டீசல் விற்பனை செய்வதைவிட, சிறிது காலத்துக்கு டீசல் விற்பனையைநிறுத்துவதே சிறந்தது என நினைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2008ம் ஆண்டு பொதுத்துறை நிறுவனங்களுடன் ஏற்பட்ட போட்டி காரணமாக, அதைச் சமாளிக்க முடியாமல் ரிலையன்ஸ் நிறுவனம் 1432பெட்ரோல் பங்க்குகளையும் மூடியது. அதேபோன்ற சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. மொத்தக் கொள்முதல் செய்பவர்களுக்கு டீசல் விலை லிட்டர் ரூ.122.05 ஆகவும், சில்லரை விலையில் ரூ.94.14 ஆகவும் இருக்கிறது.
பொதுத்துறை நிறுவனங்கள் கடந்த 2021, நவம்பர் 4ம் தேதி முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாமல் இருக்கின்ற. 5 மாநிலத் தேர்தல் முடிந்தபின் விலை உயர்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டநிலையில் இன்னும் அதே விலை தொடர்கிறது
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.