டெங்கு, ரத்தகொதிப்பு, சிக்கன் குனியாவிற்கு அறிமுகமாகிறது புதிய இன்சூரன்ஸ் ...!

Asianet News Tamil  
Published : Oct 16, 2016, 06:40 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
டெங்கு, ரத்தகொதிப்பு, சிக்கன் குனியாவிற்கு அறிமுகமாகிறது புதிய இன்சூரன்ஸ் ...!

சுருக்கம்

டெங்கு, ரத்தகொதிப்பு, சிக்கன் குனியாவிற்கு அறிமுகமாகிறது புதிய இன்சூரன்ஸ் ...!

 நாடு முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி  வருவதால், ஆட்-ஆன் பிரிமியங்களை ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அறிமுகம்  செய்கின்றன.

ஒரு சில தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், கடந்த ஆண்டு ஆட்-ஆன் இன்சூரன்ஸ் திட்டத்தில் டெங்குவை சேர்த்தது. இதில் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை மருத்துவ செலவுக்கான பிரீமியம் 444 முதல் 578 வரை நிர்ணயிக்கப்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.  

இந்த  இன்சூரன்ஸ்  மூலம், சுமார்  6,300 பேர் பலன் பெற்றுள்ளனர்.

இதுதவிர முன் மருத்துவ பரிசோதனை இல்லாமலேயே 10,000 வரை வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற இந்த மருத்துவ திட்டம் வகை செய்கிறது.

மேலும்  இது போன்ற  இன்சூரன்ஸ்  சலுகையை , பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்த  திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக டெங்கு, சினக்குன்குனியா, ரத்தக்கொதிப்பு போன்றவற்றுக்கும் தனியாக ஆட்-ஆன் திட்டங்களை இன்சூரன்ஸ் நிறுவனங்கள்  அறிமுகம் செய்துள்ளன  என்பது  குறிப்பிடத்தக்கது.

இந்த இன்சூரன்ஸ் மூலம் ,சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை   பயன்படுத்த முடியும்  என  தெரிகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் குறிப்பாக திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் டெங்கு காய்ச்சலால் இறந்துள்ளனர் என்பது  குறிப்பிடத்தக்கது.

 

 

 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

விலை ஏறுனா என்ன..? ஸ்மார்ட்டா யோசிங்க..! பெட்ரோலில் பணத்தை மிச்சப்படுத்தும் 5 வழிகள்
DIY Planters: பழைய எண்ணெய் கேனை தூக்கிப் போடாதீங்க! பால்கனியை கலர்ஃபுல்லா மாத்த 4 சூப்பர் ஐடியாஸ்