
கிரிப்டோகரன்ஸியை ஜிஎஸ்டி வரியில் சேவைப்பட்டியலில் சேர்ப்பதா அல்லது சரக்குப் பட்டியலி்ல் சேர்ப்பதா என்பது குறித்து அதிகாரிகளிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.
குழப்பம்
கிரிப்டோகரன்ஸியின் லாபத்துக்கு மட்டும் வரி விதிப்பதா அல்லது ஒட்டுமொத்த பரிமாற்றத் தொகைக்கும் சேர்த்து வரிவிதிப்பதா என்பது குறித்தும் தெளிவற்ற சூழல் இருக்கிறது.
கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்துக்கு மட்டும் 18 சதவீதம் வரிவிதிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அவ்வாறு இருந்தால் அது நிதிச்சேவையில்சேரும்.
ஊக வணிகம்
ஆனால், ஜிஎஸ்டி அதிகாரிகள் கூற்றுப்படி, “கிரிப்டோகரன்ஸி என்பதுஊக வணிகம். அதாவது லாட்டரி, கேசினோ, பந்தயம்,சூதாடுதல், குதிரைப்பந்தயம் ஆகியவற்றுக்கு ஈடானது. ஊக வணிகத்துக்கு28 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கும் போது, கிரிப்டோகரன்ஸிக்கு 18 சதவீதம் சரியாகுமா
அதேபோல தங்கத்தின் அடிப்படையில் பரிமாற்றம் செய்யும் போது ஒட்டுமொத்த பரிமாற்றத்தொகைக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. ஆதலால், கிரிப்டோகரன்ஸி மீது விதிக்கப்படும் வரிவிதிப்புக் குறித்து தெளிவான புரிதல் தேவை. ஒட்டுமொத்த பரிமாற்றத்துக்கும் வரிவிதிப்பதா அல்லது கிரிப்டோ கரன்ஸியை சரக்கு என்ற அடிப்படையில் அணுகுவதா அல்லது சேவைஅடிப்படையில் அணுகுவதா என்பதை தெளிவாக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.
ஒட்டுமொத்த பரிமாற்றமா
மற்றொருஅதிகாரி கூறுகையில் “ கிரிப்டோகரன்ஸியின் ஒட்டுமொத்த பரிமாற்றத்துக்கு ஜிஎஸ்டி வரி விதித்தால், வரிவிதிப்பு வீதம் 0.1 முதல் ஒரு சதவீதம்தான் இருக்கும். கிரிப்டோகரன்ஸிக்கு ஜிஎஸ்டி வரி எவ்வாறு விதிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது. முதலில் கிரிப்டோகரன்ஸியை எந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதன்பின் வரிவிகிதத்தை ஆலோசிக்கலாம்.
கிரிப்டோ கரன்ஸி குறித்து ஜிஎஸ்டி சட்டத்தில் தெளிவான வரையறை ஏதும் இல்லை. இதுபோன்ற டிஜிட்டல் கரன்ஸியை ஒழுங்குபடுத்த சட்டம் இல்லாத நிலையில், சட்டக் கட்டமைப்பானது அதைச் செயல்படக்கூடிய கோரிக்கையாக வகைப்படுத்துகிறதா என்பதை வகைப்படுத்துதல் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்” எனத் தெரிவிக்கின்றனர்
சட்ட வரைவு
ஒருவேளை ஊக வணிகத்தில் கிரிப்டோகரன்ஸியை கொண்டுவந்தால், ஏப்ரல் 1ம் தேதி முதல் கிரிப்டோகரன்ஸி மூலம் செய்யப்படும் ஒட்டுமொத்த பரிவர்த்தனையும் 28 சதவீதம் ஜிஎஸ்டி வரி, செஸ், சர்சார்ஜ் என 30சதவீதம் வரி விதிக்கப்படும். அதாவது குதிரைப்பந்தயம், சூதாட்டத்துக்கு விதிக்கப்படும் வரியைப் போல் வசூலிக்கப்படும்.
கிரிப்டோகரன்ஸியை ஒழுங்குபடுத்தும் சட்டவரைவு கொண்டுவருவது குறித்து மத்திய அரசு தீவிரமாக செயலாற்றி வருவதால், இன்னும் வெளியிடப்படவில்லை.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.