ஸ்டார்ட்அப் நிறுவனங்களால்தான் அடுத்து புதிய வேலைவாய்ப்பு : மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நம்பிக்கை

Published : Feb 21, 2022, 11:11 AM ISTUpdated : Feb 21, 2022, 11:13 AM IST
ஸ்டார்ட்அப் நிறுவனங்களால்தான் அடுத்து புதிய வேலைவாய்ப்பு : மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நம்பிக்கை

சுருக்கம்

ஸாட்ர்ட் அப் நிறுவனங்களால்தான் அடுத்த 25 ஆண்டுகளில்புதிய வேலைவாய்ப்பு உருவாகும். ஸ்டார்ட் அப்நிறுவனங்களுக்காக தனியாக ஈக்விட்டி நிதியை மத்திய அரசு உருவாக்கும் என்று மத்திய மின்அனு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை மற்றும் திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணைஅமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்

ஸாடார்ட் அப் நிறுவனங்களால்தான் அடுத்த 25 ஆண்டுகளில்புதிய வேலைவாய்ப்பு உருவாகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்காக தனியாக ஈக்விட்டி நிதியை மத்திய அரசு உருவாக்கும் என்று மத்திய மின்அனு மற்றும் தகவல்தொழில்நுட்பத்துறை மற்றும் திறன்மேம்பாடு, தொழில்முனைவோர் துறை இணைஅமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்

டெல்லியில் இந்திய தொழில்கூட்டமைப்பு சார்பில் ஐகான்-2022 எனும் நிகழ்ச்சியை மத்திய திறன்மேம்பாட்டுத்துறை இணைஅமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொடங்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

அடுத்த 25 ஆண்டுகளில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி, விரிவாக்கம், வேலைவாய்ப்பு உருவாக்கம், முதலீடு ஆகியவை பெரும்பாலும் நாட்டின் ஸ்டார்ட்அப் நிறுனங்களாலும், தொழில்முனைவோர்களாலும்தான் இருக்கும். 

இந்தியப் பொருளதாரம் தற்போது ஆழ்ந்த கட்டமைப்புரீதியான உருமாற்றத்தை நோக்கி நகர்ந்து வருகிறது, அதனால்தான் லட்சக்கணக்கான இளம் தொழில்முனைவோர், புதிய நிறுவனங்கள் உருவாகின்றன.

 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியமானது, கடந்த காலங்களில் இல்லாதவிஷயங்களை இந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வழங்கிடும்.ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பட்ஜெட்டில் நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தப்படி, விரைவில் புதிய ஈக்விட்டி நிதியத்தை மத்திய அரசு உருவாக்கும். 

இந்த ஈக்விட்டி நிதியத்தில் குறைந்த அளவாக 20% பங்களிப்பை மட்டும் மத்திய அரசு வழங்கும், மற்றவைகயில் ஈக்விட்டி நிதியத்தை நிர்வகிப்பது, அனைத்தும் தனியார் நிதி மேலாளர்கள் பொறுப்பில் ஒப்படைக்கப்படும். 

மத்திய அரசு உருவாக்கும் இந்த ஈக்விட்டி நிதியத்தில் அரசின் பங்களிளிப்பும், ஆதரவும் இருந்தாலும், நிர்வகிப்பது தனியாராகத்தான் இருக்கும்
புதிதாக உருவாக்கும் மருந்துத்துறை, வேளாண்தொழில்நுட்பங்கள், பருவநிலைமாற்றத்தைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிறுவனங்கள் போன்றவற்றுக்கு இந்த நிதியத்தின் மூலம் உதவலாம். 

மத்தியஅரசு ஏற்கெனவே ஸ்டார்ட் அப் இந்தியா சீட் பண்ட் ஸ்கீம்(எஸ்ஐஎஸ்எப்எஸ்) எனும் திட்டத்தை ரூ.945 கோடியில் உருவாக்குவது குறித்து தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் கர்நாடகா, உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் நிதிவழங்கிடமும் முன்வந்துள்ளன

தொழில்முனைவோர்களுக்கு சிறந்த நேரம், ஸ்டார்ட் அப் தொடங்க சிறந்த காலம். கொரோனாவுக்குப்பின், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்தல், விரிவாக்குதல், நிதியளித்தல், புதிதாக உருவாக்குதல் போன்றவை நமது பிரதமர் மோடியின் இலக்காக இருக்கிறது. 
இவ்வாறு ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார்
 

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?
Gold Rate Today (December 06): இதுதான் இன்றைய தங்கம் விலை.! விலை உயர என்ன காரணம் தெரியுமா?