சென்னையில் முதலீட்டாளர்கள் மாநாடு.. தென் மாவட்டங்களில் முதலீடு செய்யும் டாடா பவர், செம்கார்ப்..!

By vinoth kumarFirst Published Jan 6, 2024, 2:47 PM IST
Highlights

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நாளை தொடங்க இருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். 

ஐபோன் உதிரிப்பாகம் தயாரிப்பு தொழிற்சாலை விரிவாக்கம் செய்வதற்காக ஓசூரில் டாடா நிறுவனம் கூடுதலாக ரூ.7000 கோடி முதலீடு செய்கிறது. இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளில் சுமார் 30,000 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டார்கள் மாநாடு நாளை தொடங்க இருக்கிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதில், மத்திய தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் 30,000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். 450க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். 50க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். 

Latest Videos

இதையும் படிங்க;- ஸ்டெர்லைட் தரப்பில் இதெல்லாத்தையும் வாதமா வைப்பாங்க! எதிர்கொள்ள அரசு இப்போதே தயாராக இருங்க! அலறும் ராமதாஸ்!

குறிப்பாக சிங்கப்பூர், இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்கின்றனர். 26 அமர்வுகளில் 170க்கும் மேற்பட்ட உலக புகழ் வாழ்ந்த பேச்சாளர்கள் பங்கேற்கிறார்கள். இதில் முந்தைய முதலீட்டாளர்கள் மாநாடுகளை விஞ்சும் வகையில் முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள் பெறப்பட உள்ளன.

இந்நிலையில் டாடா நிறுவனம் தமிழகத்தில் கூடுதலாக ரூ.7,000 கோடி ரூபாயை முதலீடு செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது. ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்வதற்காக முதலீடு செய்யவுள்ளது. இதன் மூலம் அடுத்து வரும் ஆண்டுகளில் சுமார் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இதையும் படிங்க;-  #BREAKING: இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட திமுக இளைஞரணியின் மாநில மாநாடு.. புதிய தேதி அறிவிப்பு!

மேலும், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா பவர் சிறுவனம் முதலீடு செய்கிறது. கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, பெரம்பலூரில் தோல் அல்லாத காலணி தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்தகம் செய்யப்படுகிறது. இதேபோல், வட தமிழ்நாட்டில் ஸ்டெலண்டிஸ் நிறுவன முதலீடு செய்ய உள்ளது. வந்தே பாரத் ரயில்களை தயாரிக்கும் டிடாகர் வீல்ஸ் நிறுவனமும் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!