
BMW கால் டேக்ஸி…....!!! புக் பண்ணுங்க ஓலா...!!! அதிரடி சரவெடி ..!!!
BMW என்றாலே , நாம் கொஞ்சம் நேரம் நின்று ரசித்து பாப்போம். நம் வால் நாளில் ஒரு முறையாவது இந்த காரில் பயணிக்க முடியுமா என்ற ஏக்கம் பலருக்கும் உண்டு.
இனி இந்த கவலை உங்களுக்கு வேண்டாம்......
அமாம், BMW காரை கால் டாக்சியாக பயன்படுத்தும் புதிய திட்டத்தை ஓலா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே ஓலா நிறுவனத்தின் பிரீமியம் கால் டாக்சி சேவையில் பல ஆடம்பர கார்கள் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது BMW காரின் வருகை அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
BMW காரை ஓலா மூலம் கால் டாக்சியாக அழைப்பவர்கள், மினிமம் கட்டணமாக 250 ரூபாயும்,அதன் பிறகு ஒவ்வொரு கிலோமீட்டருக்கு 20 ரூபாயிலிருந்து 22 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில், மணி நேரக் கணக்கிலும் BMW காரை கால் டாக்சியாக பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் தொடர்ச்சியாக இந்த திட்டமானது, முதற்கட்டமாக டெல்லி,பெங்களூர் மற்றும் மும்பை நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த அற்புத திட்டத்தால், சாதாரண மக்கள் கூட BMW காரை , கால் டேக்ஸியாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
குறைந்த விலையில், சேவையை வழங்கி வரும் ஓலாவின் இந்த முயற்சி உண்மையில் பாராட்டத்தக்கது.......!!!
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.