அசத்தும் முகேஷ் அம்பானி... இத்தனை கோடிகளுக்கா இந்த ஹோட்டலை வாங்கினார்..?

By Thiraviaraj RMFirst Published Jan 10, 2022, 1:46 PM IST
Highlights

ஹோட்டலின் மற்ற பங்குதாரர்களும் தங்களது பங்குகளை விற்க விரும்பினால், அதே மதிப்பீட்டின் அடிப்படையில் மீதமுள்ள பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

ஆசியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி, நியூயார்க் நகரில் உள்ள மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலை வாங்கியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் சென்ட்ரல் பார்க் அருகே இந்த பிரம்மாண்ட மாண்டரின் ஓரியண்டல் நியூயார்க் நட்சத்திர ஹோட்டல் அமைந்துள்ளது. கடந்த 2003ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டலில் 248 அறைகள், நடன விடுதிகள், ஸ்பா மற்றும் மதுபானக் கூடங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இடம் பெற்றுள்ளன. அமெரிக்காவின் பிரபல தலைவர்கள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் இந்த ஹோட்டலுக்கு அடிக்கடி வருவது வழக்கம்

.

அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், துபாய் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் கட்டுப்பாட்டில் உள்ள கேமன் தீவுகளை தளமாகக் கொண்ட ஹோட்டலின் தாய் நிறுவனத்தை கையகப்படுத்துவதாக அறிவித்தது. ரிலையன்ஸ் நிறுவனம் நிறுவனம் ஹோட்டலின் 73.4% பங்குகளை வாங்கியுள்ளது.  இந்த ஒப்பந்தம் மார்ச் இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோட்டலின் மற்ற பங்குதாரர்களும் தங்களது பங்குகளை விற்க விரும்பினால், அதே மதிப்பீட்டின் அடிப்படையில் மீதமுள்ள பங்குகளை வாங்க திட்டமிட்டுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

 மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டல் குழுமம் இன்னும் 25% பங்குகளை வைத்திருக்கிறது.  இதற்காக 730 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான ஹோட்டல்களைப் போலவே, மாண்டரின் ஓரியண்டலும் கோவிட்-19 தொற்றுநோயால் மோசமாகப் பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை பங்குச் சந்தை தாக்கல் செய்ததில், நியூயார்க் ஹோட்டல் 2018 மற்றும் 2019 இல் முறையே $115 மில்லியன் மற்றும் $113 மில்லியனுடன்,​​2020 ஆம் ஆண்டு முழுவதும் வெறும் $15 மில்லியன் மட்டுமே ஈட்டியுள்ளதாக ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது.

சென்ட்ரல் பார்க் அருகே அமர்ந்து கொலம்பஸ் சர்க்கிளைக் காணும் வகையில் அமைந்துள்ள இந்த ஹோட்டல், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முக்கிய சொத்தாக கருதப்படுகிறது. அம்பானியின் பரந்து விரிந்த நிறுவனமானது ஆற்றல், சில்லறை வணிகம் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றில் முதலீடு செய்கிறது. ஆனால் "நுகர்வோர் மற்றும் ஹோட்டல் தொழிலில் ஆர்வம் காட்டுகிறது" 

ரிலையன்ஸ் தற்போது இந்தியா மற்றும் ஆறு நாடுகளில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல்களை கைப்பற்றியுள்ளது. அத்துடன் பிரபல ஆங்கில நாட்டு கிளப்பான ஸ்டோக் பார்க்கையும் வாங்கியுள்ளது. அம்பானி இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரராகவும், உலகின் பதினொன்றாவது பணக்காரராகவும் இருக்கிறார்.

சர்வதேச அளவிலான 'போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஹோட்டல்', 'போர்ப்ஸ் பைவ் ஸ்டார் ஸ்பா' உள்ளிட்ட பல விருதுகளை இந்த ஹோட்டல் வென்றுள்ளது. இதேபோல, மும்பை பாந்த்ரா காம்ப்ளக்சில் நவீன வசதிகளுடன் கூடிய மாநாட்டுக் கூடம் அடங்கிய ஹோட்டலையும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டி வருகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் டாட்டா குழுமம் ஏற்கனவே நட்சத்திர ஹோட்டல் தொழிலில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. இதேபோல, சர்வதேச அளவிலான ஹோட்டல் தொழிலில் ரிலையன்ஸ் நிறுவனமும் ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது.

click me!